கலைத்தூரிகை வரையாத் தென்றல்
கலைந்தாடும் கூந்தல் எழில்தமிழ் பாவை
கலைத்தூரி கைவரையாத் தென்றல் -அலையோ
விழிகள் அசைந்திடும் வண்ணக் கயலோ
மொழிபே சிடாமௌன மோ .
----இருவிகற்ப நேரிசை வெண்பா
கலைத்தூரி கைவரையாத் தென்றல் -- அலையோ ------என்ற
கவிச் சகோ பழனிராஜன் அவர்களின் தளைதட்டா முச்சீரும் இயைந்த தனிச் சொல்லும் கொண்ட வெண்பா இரண்டாம் அடி
பரிந்துரைப்படி அமைக்கப்பட்ட வெண்பா .