உல்கா நாயக்

உதவி இயக்குநர்: நமக்கு ஒரு தயாரிப்பாளர் கெடச்சுட்டாருங்க.
@@@@@
இயக்குநர்: யாருய்யா அவுரு?
@@@@@
தலைநகர்ல இருந்து வந்திருக்கிறாருங்க. அவருக்கு வயசு 25. அவரோட அப்பா உலக அளவில் எல்லா துறைமுகங்களுக்கும் போற மூணு கப்பல் வச்சிருக்காராம். அவுரு நடிக்கற முதல் படம். ஐநூறு கோடி செலவிடத் தயாராம்.
@@@@@
நமக்கு நல்ல வேட்டை. சரி எப்படி நம்மளத் தேடி வந்தாரு?
@@@@
நீங்க இயக்கிய படங்கள் எல்லாம் வெள்ளி விழாக் கொண்டாடிற விசயத்தை ஒரு இந்திப்பட கதாநாயகன் அவுருக்குச் சொன்னராம். நாம தமிழ் தெரியாதவங்களுக்கு அதிகமாக வாய்பளிப்பதையும் அவுங்க சொந்தக் குரலில் பேச அனுமதிப்பதையும் கேள்விப்பட்டுத்தான் வந்திருக்கார்.
@@@@@
அவுரு பேரு என்னய்யா?
@@@@@
'தில்வீர்'.
@@@@@
அருமையான பேருய்யா. நம்ம தமிழ் ரசிகப் பெருமக்களுக்கு 'தில்', 'தில்லு'ங்கற வார்த்தைகள் ரொம்பப் பிடிக்கும்யா. இந்த தீல்வீர் அவரோட முதல் படமே அவர சூப்பர் ஸ்டார் ஆக்கிடும்யா. சரி அவர வரச்சொல்லு.
@@@@@
சரிங்க அய்யா. எனக்குத் தெரிஞ்ச ஆங்கிலத்தில அவர் நீங்க சொலலற சொற்களை எல்லாம் உச்சரிக்கச் சொல்லி அனுப்பி வைக்கிறேன் அய்யா.
@@@@
(தில்வீர் வருகிறார்)
வண்க்காம் சார்.
@@@@
வாய்யா தில்வீர். வணக்கம். வணக்கம். நான் சொல்லற பேருங்கள நீ சொல்லு பாப்போம்.
@@@@
உலக நாயகன்.
@@@@@@
உல்கா நாயக்.
@@@@
இளைய தளபதி.
@@@@@
இல்யா தல்பத்.
@@@@@#
இளைய திலகம்.
@@@@@
இல்யா திலக்.
@####
நடிப்பிசைத் தென்றல்.
@@@@@
நாடிபிசா தேன்றால்.
@@@@@
புரட்சி நடிகர்.
@@@@@
புராச்சி நட்கர்
@@####
இது போதும்யா. என்னோட படத்தில நடிக்கிற தகுதி உனக்கு நூறு சதவீதம் இருக்கு. கன்கிராட்ஸ். வாழ்த்துக்கள்.
@####
நன்ட்ரீ ஆய்யா.

எழுதியவர் : மலர் (5-Aug-19, 9:04 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 65

மேலே