முடியாத பயணங்கள்

விந்ததனின் ஓட்டத்திலே தொடங்கிய பயணம்
விதிமுடிந்து வீழும்வரை முடிவ தில்லை,
வந்துலகில் பிறந்தபின்னே நிறைவாய் வாழ
வயிற்றுக்குச் சோறிடவே வேலை தேடியும்,
சொந்தமாக வசிக்குமிடம் வசதி வாய்ப்பு
சொகுசான வாழ்க்கையெலாம் தேடிக் கிடைத்தும்,
சிந்தையிலே நிறைவில்லா மனிதர் வாழ்வில்
சுமையான பயணங்கள் முடிவ திலையே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (8-Aug-19, 7:05 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 171

மேலே