என்னை நொறுக்கி செல்வதேன்
காதலே என் காதலே
என்னை நொறுக்கி செல்வதேன்
சில்லாக சிதறி தெறிக்கிறேன்
இதயம் ரெண்டாக பிழைக்கிறேன்
எல்லாம் உன் சிரிப்பாலே
கண்களில் உன் கண்களில் என் அழகை கொண்டு போகிறாய்
பார்வையால் உன் பார்வையால் என் வயதை கடத்தி போகிறாய்
மூச்சினால் உன் மூச்சினால் என்னை வருடி செல்கிறாய்
பேச்சினால் உன் பேச்சினால் என் உலகம் மறக்க செய்கிறாய்
கொஞ்சலால் உன் கொஞ்சலால் நான் வெட்கம் அறிந்துக் கொண்டேன்
காதல் கொண்டு முளைத்திருந்த வேளையில்
போனாயே எனை விட்டு
துச்சமாய்
குப்பையாய்
காரி உமிழ்ந்து
தூக்கி எரிந்து
உயிரினினின் உதிரத்தை பிரித்து எடுக்கிறாய்
உடல் கூட்டினில் சூடு வைத்து எரிக்கிறாய்
உன் பிரிவு
நெஞ்சை குத்தி கிழிப்பதேன்
நிஜமும் சிரிப்பதேன்
வலியினின் ரணங்களை ரசிப்பதேன்
தாங்காது என் அன்பே போதும்
முடியாது இனி இந்த கொடுமை
ஏற்காது நெஞ்சம்
மனம் இறங்கிடு கொஞ்சம்