நினைவே நீ தானே

நீ எதற்காக இறை சிற்பி நெய்த வசீகர
உடையை உன்னுடலில் உடுத்தாய் ?
எனக்கு அடுத்தாய் வந்து உன் விழிகளால்
என் மீது வேல் தொடுத்தாய் ?
உன் குண்டு மல்லி வாசத்தை
ராமுழுதும் எனக்கு ஏன் கொடுத்தாய்?
உன் வெண்முத்துப் பற்களால்
என் மனதைக் கடித்தாய் உன்
வெண்டை விரல்களால் என்னை எடுத்து மடித்தாய்
இடுப்பு அடுக்கில் எதற்காக
கொசுவமாய் எனைச் செருகி உடுத்தாய்
நான் படுத்தாலும் பக்கம் வந்து
எதற்காக என் ராத்தூக்கம் கெடுத்தாய் ?
என் கனவிலும் நனவிலும்
என்னை இயங்க விடாது உன்
நினைவினாலே ஏனடி என்னை தடுத்தாய் ?


அஷ்றப் அலி

எழுதியவர் : (8-Aug-19, 12:18 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 64

மேலே