என் உள்ளம் நிறைந்தவளே

என் உள்ளம் நிறைந்தவளே🌹

உன் சின்ன கண் அசைவுக்கு ஏங்கும் என் உள்ளம்
உன் சிங்கார வடிவத்தை தினம் தரிசிக்க துடிக்கும்
என் உள்ளம்
உன் மின்சார பார்வை
என் மீது தினம் பட ஏங்கும்
என் உள்ளம்
உன் காந்த விழிகளை காண காத்திருக்கும்
என் உள்ளம்
உன் உதட்டோர புண்ணகை பூவை அனுதினமும் ரசித்து, பரவசப்படும் என் உள்ளம்
உன் கொடி இடை கொண்டு
கோல மயில் என
நாட்டிய நடை பழகும்
அந்த அற்புத காட்சியை பார்த்து ஆனந்த கூத்தாடும்
என் உள்ளம்
உன் அம்பு பார்வையால்
ஆயிரம் காதல் தீபங்கள்
என் இதயத்தில் ஏற்றி
மகிழ்ச்சி அடைந்த
என் உள்ளம்.

- பாலு.

எழுதியவர் : பாலு (9-Aug-19, 8:41 am)
சேர்த்தது : balu
பார்வை : 253

மேலே