அம்மா என்றால் அன்பு
நனைகிறேன்
ஈரமாகாமலே
அம்மாவின் பாச மழை
விலகி வந்தேன் அடுத்த
நொடியில் அம்மாவின் அழைப்பொலி
தாலாட்டினாள் அம்மா
என் கண்கள் மட்டமல்ல
என் காயங்களும் உறங்குகிறது
நடுநிசி நேரம்
அழைப்புமணி அழுத்தினேன்
அடுத்த நிமிடமே கதவு திறக்கப்பட்டது
அம்மா விழித்திருக்க
மனைவி உறங்கியிருந்தாள்...
தாயுடன் ஒரு நிமிடமாவது
பேசவில்லை எனில்
என் விழிகள் உறங்குவதில்லை
அவளுக்கும் தான்..
அம்மாவின் விழியில்
என் பிம்பமும்
என் விழியில் அவள் பிம்பமும்
பதியாமல் பொழுதுகள் நகர்வதில்லை இருவருக்குமே...
தெய்வத்தை வணங்க
தெய்வத்தோடு சென்றேன்
ஆலயத்திற்கு - அம்மா.
என் முதல் பசியை
போக்கியவள் அம்மா
அவளின்
இறுதி பசி போக்கும்வரை
உழைப்பது என் கடமை..