நீ அலுவலகம் சென்று விட்டால்

என் குழந்தையின் அழுகுரல் ஆயிரம் அர்த்தங்கள் சொல்கின்றன காலையில் நான் அலுவலகம் புறப்படும்பொழுது,
என் பிஞ்சு விரல் யாரை தீண்டும் நீ அலுவலகம் சென்று விட்டால்,
என் கரம் பிடித்து யார் நடை பழக்குவார் நீ அலுவலகம் சென்று விட்டால்,
என் கால்கள் ஏடறினால் யார் என்னை தாங்கி பிடிப்பார் நீ அலுவலகம் சென்று விட்டால்,
என் கண்களில் நீர் வடியுமே யார் ஆறுதல் கூறுவர் நீ அலுவலகம் சென்று விட்டால்,
என் மலத்தை முகம் சுளிக்காமல் யார் சுத்தம் செய்வார் நீ அலுவலகம் சென்று விட்டால்,
என் பசிக்கு யாரிடம் பால் கேட்பேன் நீ அலுவலகம் சென்று விட்டால்,
என் பாஷை அறிந்து எனக்கு ஏற்படும் உடல் உபாதைகளை யார் குணப்படுத்துவார் நீ அலுவலகம் சென்று விட்டால்,
என் தூக்கத்திற்கு தூரிகை கட்டி யார் தாலாட்டு படுவார் நீ அலுவலகம் சென்று விட்டால்,
எனக்கு அச்சம் வரும் வேளையில் யாரை கட்டி அணைப்பேன் நீ அலுவலகம் சென்று விட்டால்,
என் மழலையை விட உனக்கு உன் மடக்கைக்கணினி முக்கியமானதா?
ஆயிரம் காரணங்கள் நீ கூறலாம் எனக்கோ அகிலமே நீ தானே,
எல்லாவற்றிக்கும் மேல் அம்மா என்று யாரை அழைப்பேன் அம்மா.

எழுதியவர் : சுசித்ரா (6-Aug-19, 5:53 pm)
பார்வை : 103

மேலே