வானமே வருக _ -உரையாடல் குறுங்கதை

வானமே வருக!
@@@@@
வானம், நீ கூப்புட்டா வர்றததுக்கு மனுசனா அல்லது வீட்டு விலங்கா பறவையா?
@@@@
எம் பக்கத்தில என்னை நோக்கி வருதுடா.
@@@@@@
உலகம் முழுவதும் தெரியற வானம் உன்னை நோக்கி வருதா? எனக்கு மூணு வயசிலேயே காது குத்தீட்டாங்கடா மடையா.
@@@@@
நீதான்டா அந்த வானம்.
@@@@@
நான் எப்பிடிடா வானம் ஆவேன்?
@@@@@
சரி உன் பேரு என்னடா?
@@@@@
என்னடா கிண்டல் பண்ணறயா?
@@@
கிண்டலும் இல்ல. சுண்டலும் இல்ல. உன் திருவாயாலே உன் பேர ஒரு தடவை சொல்லுடா வானம்.
@@@@@
டேய் 'வானம்' இல்லடா முட்டாள் நண்பா. நான் 'ஆகாஷ்'.
@@@@@
சரி உன் பேருக்கு என்னடா அர்ந்தம்?
@######
அந்தப் பேரை எனக்கு வச்ச என்னைப் பெத்தவங்களே தெரியாது. எல்லாரும் அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்கள வைக்கிறாங்களே என்னோட பெற்றோரும் எனக்கு 'ஆகாஷ்'ன்னு பேரு வச்சிருக்கிறாங்க.
########
அட ஆக்காசு 'ஆகாஷ்'னா 'வானம்'னு அர்த்தம்டா.
@@@@@
'வானமா'? அருமையான தமிழ்ப் பேருடா. இந்தத் தகவலைச் சொன்ன உனக்கு மிக்க நன்றி. அம்மா அப்பாகிட்டச் சொல்லி என் பேர 'வானம்'னு மாத்தி அரசிதழில் வெளியிடச் செய்யப்போறன்டா. இதை நான் செய்யிலின்னா நான் தமிழனே இல்லடா. என் வாழ்க்கையிலே இது ஒரு திருப்புமுனையா இருக்கட்டும். இது என்னோட வகுப்பு மாணவர்களிடம் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தட்டும். வாழ்க உலகின் முதல் மொழி நம் செம்மொழி தமிழ்!
@@@@@
மிக்க மகிழ்ச்சிடா 'வானம்'

எழுதியவர் : மலர் (10-Aug-19, 7:54 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 98

மேலே