காவிகாந்த் ஆவிநாத்

(பள்ளி வகுப்பறையில்)
யாருடா நம்ம வகுப்பில புதுசா ரண்டு பசங்க சேர்ந்திருக்கிறாங்களாமே?
@@@@@
ஆமாங்க அய்யா. காவிகாந்த்தும் ஆவிநாத்தும் இன்னிக்குத்தான் சேர்ந்நாங்க அய்யா.
@@@@@@
என்னடா இது. ரண்டு பசங்களோட பேரும் பயமுறுத்தற மாதிரி இருக்குது. காவிகாந்த் அரசியல்வாதி பையனா இருந்தா வம்பு. ஆவிநாத்..... ஆவி பயமுறுத்தற பேரா இருக்குது. காவிகாந்த் எழுந்து நில்லுடா.(புது மாணவன் எழுந்து நிற்க) ஏன்டா உங்கப்பா அரசியல்வாதியா?
@@#@#
இல்லீங்க அய்யா. எங்கப்பா விவசாயி. அவரு பேரு விசுவநாதன். எங்க ஊர் காட்டுப்பட்டி. என் முழுப்பெயர் காட்டுப்பட்டி விசுவநாதன் காந்த். 'கா. வி. காந்த்'ன்னு சொல்லவேண்டியதை பையன்கள் 'காவிகாந்த்'ன்னு சொல்லி கிண்டல் செய்யறாங்க அய்யா.
@@@@@@
சரி, சரி. உட்கார். ஏன்டப்பா ஆவி நீ என்னடா சொல்லப்போற? ஆவின்னாவே எனக்கு பயமா இருக்குதடா.
@####@
அய்யா எங்க ஊர் ஆலம்பட்டி. என் அப்பா பெயர் வில்வராசு. என்னோட முழுப்பெயர் ஆலம்பட்டி வில்வராசு நாத். 'ஆ. வி. நாத்'னு சொல்லவேண்டிய என்னோட பேர பையன்கள் 'ஆவிநாத்'னு கிண்டல் செய்யறாங்க.
@@@@@
பரவால்ல. இனி பயமில்லை. பாடத்தை ஆரம்பிக்கலாம். இனிமேல் வகுப்பில 'ஆவி', 'காவி'ன்னெல்லாம் சொல்லக்கூடாது. அந்த ரண்டு பேரையும் 'நாத்' 'காந்த்'ன்னு கூப்பிடணும்.
@@@@@
(மாணவர்கள் அனைவரும்);: சரிங்க அய்யா.

எழுதியவர் : மலர் (12-Aug-19, 10:55 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 50

மேலே