பிணம் தின்னிக் கழுகுகளே

பட்டினி வயிறு
உடலோடு ஒட்டிய குடல்.
காண்பவர் கண் கலங்கும்
அலங்கோல தோற்றம் .
ஒரு பிடி அருசிக்காக உயிர்
குடித்த நாதாரிக் கூட்டங்களே ....!!

நாறுகின்றதே உங்கள் தேசம்
அதை சுத்தம் செய்ய வக்கத்துப்
போன தாசி மக்களே.
மனித உருவில்
உலாவும் மிருகங்களே ....!!!

நீங்கள் புரிந்த செயலைக் கண்டு
கொதிக்கிரதே குருதி அடுப்பில்
இட்ட கொதி நீர் போல்.
உதவாக் கர நாதாரிகளே
உணவுக்காக திருடியவனை
அடித்துக் கொண்ட பாதகர்கள் ...!!!


பாரத நாட்டு பைத்தியங்களே
நாட்டையே கொள்ளை அடித்து
தன் முகத்தில் வெள்ளையடித்து
நல்லவன் போல் உலாவுகின்றானே
அவனையெல்லாம் விட்டு விட்டு
அப்பாவியை பலி எடுத்த பொரிக்கிகளே ..!!!


உன்னையெல்லாம் தொங்க
விட்டு தோல் உரித்து உயிரோடு
கொதி தண்ணீ ஊற்றி நீ துடிப்பதை
பார்த்து ரசிக்க வேண்டுமடா
ஆட்டு மந்தைகளே .....!!!


நல்லவன் பல்லவன் கண்ணில்
நீங்கள் பட்டு விடாதீர்கள் உன்
இனப் பெருக்கும் உறுப்பை இழந்து
விடுவீர்களடா பச்சோந்திகளே ...!!!


சாதிக்க வேண்டிய வயதில்
சாக்கடை வாழ்க்கை வாழும்
அயோக்கியர்களே
குமுறுகின்றது உள்ளம்
கொந்தளிக்கிறது ஏழ்மை மனம் ....!!!


வக்கத்துப் போன அரசு குற்றம்
புரிந்தவனை தண்டிக்காமை
வெட்கத்துப் போன ஆட்சியைக்
காட்டும் காட்சி கடித்துக் கொதறிய
நாய் கூட்டமே கட்டாயம் தண்டிக்கப்
படுவாயடா மக்கள் மனங்களிலே ....!!!

பதை பதைக்கின்றதே ஏழ்மைக்கும்
ஏழைக்கும் இது ஒரு அகோரக்
கூத்து ஆட்டி வைக்கும் கூட்டத்தைக்
கொட்டகை போட்டு விடாமல்
கட்டளை இன்றி தண்டிக்கத் துணிந்து
விடுங்களேன் இளையோர்களே.....!!!


ஏழையின் உயிரானவை
ஆத்மா சாந்தி காணவே
கொடு இறைவா இவையும்
உன் விளையாட்டோ விம்மல்
போடுது எத்தனையோ இதழ்கள்

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (12-Aug-19, 12:36 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 85

மேலே