வெற்றி உனது
உன் கவிதைகளோடு பயணிக்க
விரும்புகிறேன்...
உன் ஊக்கங்களோடு பயணிக்க
விரும்புகிறேன்
உன் தோழியாய் அல்ல
உன் எதிரியாய் அல்ல
உனக்கு தெரிந்தவளாய் அல்ல
உன் ரசிகையாய் ...
உன்னுள் இருக்கும் அனைத்து
சந்தோஷங்களை நீ காட்டு
உன் கவிதையில்
உன் துன்பங்களை தூர தள்ளு
உன்னை சுற்றி இன்ப வலை
பின்னு
பிறப்பு இறப்பு இடையில் நீ சாதனை
புரியும் தருணங்கள் இது.....