மனித மனம்

மனிதனின் மனம் ஒரு குரங்கு
அது அவனை அறியாமலே
அவனுள்ளே உறங்கும் ...!!

மாறு பட்ட குணங்கள்
மணிக்கொருதடவை மாறும்...!!

மரமும் தாவும் வெளிப்படையாக
மதத்திற்கும் தாவும். ...!

ஏற்ற இறக்கங்கள் பார்த்து
விருப்பங்கள் கூறும்.
அரக்கன் போல் தலை விரித்தாடும்...!!

இரு விழியானாலும்
ஒரு காட்சியைக் காட்டும்.
மனமோ அந்தக் காட்சிக்குள்
நின்று தரம் பிரித்துப் பார்க்கும்...!!

நிறம் அற்ற மனதிற்குள்
தரம் அற்ற குணம் எதற்கு.
வரம் கொடுத்த இறைவனையும்
வசப்பாடும் மனிதனுக்கு....!!

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (12-Aug-19, 12:38 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : manitha manam
பார்வை : 172

மேலே