பதாகையில் பாலாபிசேகம்

பதாகையில் பாலாபிசேகம்...
வழிந்தோடிய வெண் திரவத்தை
வெதும்பிய மனதோடு
வேடிக்கை பார்த்தான்
பசியாறி பல நாள்
ஆகிப் போனதால்
உதிரச் சோகையுடன்
உப்பிப் போன வயிறோடிருந்த
பால் மணம் மாறா
அந்தப் பாலகன்.
பதாகையிலிருந்த கதாநாயகன்
பளிச்சிடத் சிரித்தார்
ஏதும் அறியாதிருந்த
ஏழைச் சிறுவனைப் பார்த்து.
விசிறிகளுக்குக் கொண்டாட்டம்
விதியற்றோருக்குத் திண்டாட்டம்
- தமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு