வலிகள் தீருமா கண்ணீர் மாறுமா

கன்னியர்கள் வான
வெடிக்கு இரையான
தினம் நேற்றைய தினம்./

கட்டழகோடு இரட்டை சடையோடு
இலட்சியங்களோடு
இல்லம் விட்டு நடந்த பூக்கள் எல்லாம்
சிதறுண்டு சின்னா பின்னமாகி
சிதைந்த முகத்துடன் பாடை ஏறிய
தினம் நேற்றைய தினம்./

பெற்ற பிள்ளைகளை பறி கொடுத்து
கதறிய படியே துடி துடித்து
கலங்கியே பெற்றோர்கள் தவித்த
தினம் இன்றைய தினம். /

வேதனையின் விளிம்பில்
கண்ணீர் வெள்ளத்தில்
துயரம் அணை தாண்ட.
அடக்க முடியாத துன்பத்திலே
தமிழர் மூழ்கி இருந்த தினம்
இன்றைய தினம். /

இதே நாள் இன்ப ஓடயில் நீந்தி
இனிப்பு வகைகள் பகிர்ந்து
எத்தனையோ சிலைக்கு மாலை சூட்டி
என்னன்னவோ வாக்குறுதிகளை
அள்ளி வீசி.
அளவில்லா மகிழ்ச்சிக் கொண்டாட்டம் இந்திய அரசு போட்டதும் இதே தினம் ./

சுதந்திரம் என்னும் போர்வையில்
மனிதனை இயந்தியமாய் பார்க்கும்
நாடு .
அன்று கும்மாளம் போட்டோர் இன்று இல்லை .
இனி வரும் காலமாவது உண்மையான சுதந்திரம் காணட்டும் தமிழ் நாட்டு தமிழர்களாவது ..../

ஈழத்தில் உதித்து இனவாத
வெறியர்களால் இளமையிலே
உதிர்ந்த கன்னிப் பூக்களுக்கு #கண்ணீர் #அஞ்சலி செலுத்தி இன்று சுதந்திர தினம் கொண்டாடும் நட்புக்களுக்கு என்

#வாழ்த்துகள்.

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (15-Aug-19, 9:15 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 78

மேலே