இராணுவ வீரர் மனைவி

இராணுவ வீரர் மனைவி🙏🏽

என்னிடம் இப்போது இருப்பதெல்லாம்
நீ விட்டு சென்ற அன்பும்.
நீ நேதாஜியுடன் கம்பீரமாக இருக்கும் போட்டோவும் தான்.

பீடி சுற்றி வயிற்றை கழுவுகிறேன்.
முதுமை என்னை தள்ளாட செய்கிறது.
வறுமை என்னை வாட்டுகிறது.
மரணம் அழைக்கவில்லையே என்று மனம் ஏங்குகிறது.
அங்கு வந்தாலும் மீண்டும் உன்னை நேத்தாஜி படையில் வீரனாக காண்பேன்.
விரைவில் வந்துவிடுவேன்.
எனக்காக காத்திரு
வீர காதல் மீண்டும் செய்வோம்.

- பாலு.

எழுதியவர் : பாலு (15-Aug-19, 1:53 pm)
சேர்த்தது : balu
பார்வை : 57

மேலே