பைத்தியக்காரன்
உங்களைப் போல
தான்.......
ஒவ்வொரு நாளும்
விடிகிறது.....
வாழ்க்கை புதிதாய்.....
நான் கொஞ்சம்
விசித்திரமானவன்....
ஓடி ஓடி
உழைக்கும் - நிலையும்
எனக்கில்லை.......
பிறரை புறந்தள்ளி
வசைபாடும் - வாஞ்சையும் எனக்கில்லை...........
உணவு உண்டால்
களைப்பாறுவேன்......
உள்ளம் நொந்தால்
எனக்குள்ளே....
இளைப்பாறுவேன்........
ஆதரவென்று
யாரும் இல்லை........
அடுத்தவரை நம்பி
நான் இல்லை........
உடை கொஞ்சம்
அழுக்கு தான்.........
அதை.,
உள்ளத்தில்
எதிர்பாராதீர்கள் - கொஞ்சம் ;
வெழுப்பு தான்.........
கோபம் வந்தால்
கத்துவேன்.........
குழந்தை போல
சுத்துவேன்..........
யாரையும்
ஏமாற்றியதில்லை......
நேரத்திற்கு
தகுந்தார்போல் உருமாறியதில்லை.......
வாழ்க்கை
எதுவென்று - தெரியாமல்
ஓடும்..........
உங்களைவிட
நின்று நிதானமாய்....
ரசிக்கும்... நான் - கொஞ்சம்
தெளிவு தான்......
உங்களின்
ஏளனமும் ; நையாண்டியும் ;
நான்
நிறைய ரசித்தது உண்டு........
உங்களின்
பைத்தியக்கார
சிந்தனையில்......
சற்று வேறுபட்ட
" பகுத்தறிவாதி " நான்........
கைக்கொட்டி சிரிக்கும்
உங்களைப் பார்த்தால்...... எனக்குள்.......
பரிதாபமாக இருக்கிறது.....
பாவம்....
" பைத்தியக்காரர்கள் " என்று.....
" முடனின் பார்வையில்...
கல்லும் சாமி " தான்.........
உங்களின் பார்வையில்
நான் " பைத்தியக்காரன் " தான்.......
ஹா...ஹா.....
நல்ல
வேடிக்கையான உலகம்
By
வெங்கட் லெட்சுமணன்.