வேலியே பயிரை மேய்த்தால்

நதிக்கரையின் படிகளில் அவள்
கையில் குடத்துடன் ….. இதோ
மெல்ல படிகளைவிட்டு நதியில் ஆழமில்லா
ஓர் இடத்தில் இறங்கிவந்தாள் ….அங்கு
பாதி உடை உடலை மறைக்க தலை முதல்
கால் வரை தேய்த்து குளித்துக்கொண்டிருக்கும்
சில பெண்களுடன் இவளும் சேர்ந்தாள் குளித்தாள்
குளித்துவிட்டு அதே ஈர உடையாள் தன்னை
சுற்றிக்கொண்டு, குடத்தில் நீர் எடுத்து நிறப்பி
தலையில் வைத்துக் கொண்டு கொடி இடையாள்
அன்னம்போல் மெல்ல நடந்து சென்றாள்
அழகு சிலை உயிர்பெற்று நடந்து போகிறதோ!
என்று நினைத்த நான் திரும்பி பார்க்க, அங்கு
நதிக்கரை சார்ந்த புதர் சூழ்ந்த மணல் மேட்டில்
ஓர் சலனம் …..சில வஞ்ச நெஞ்சர் குளிக்கும்
பெண்கள் கூட்டத்தை அப்படியே கண்டு ரசித்து
தம் கைப்பேசியில் புகைப்படமாயும் எடுத்துவிட்டனர்
அதை ஒருவர்க்கொருவர் காட்டி சிரித்து
கும்மாளம் போட்டு வெளியேறி விட்டனர்
அப்பாவி பெண்கள் இதை ஒன்றும் அறியார்

அன்று அக்கிராமத்தில் ஏதோ ஒரு சச்சரவிற்கு
பஞ்சாயத்து குழுமி இருக்க ...அதில் நான்
கண்டது என்னை அதிர்ச்சிக்கு குள்ளாக்கியது
தீர்ப்பு கூற வந்த அத்தனைப் பேரும் அன்று
நதிக்கரையில் மறைவிலிருந்து பேடிகள்போல்
பெண்ணின் நிர்வாண குளியலை ரசித்த
அநாகரீக ஈன மாந்தர்…..
அழகை ரசிப்பது அநாகரீகம் அல்ல
வெறிக்கொண்ட kangalaal karpai
sooraiyaada ninaithal அந்த ninaipirke
தண்டிக்கப்பட வேண்டியவர்கள்

யார் யாருக்கு நீதி வழங்குவது ….
வேலியே பயிரை மேய்வதா ….

பின் இத்தனையும் நீயும்தானே ரசித்தாய்
என்று வினவின், ஐயா , நான் முப்டியில்
அங்கு காவலுக்கு சென்ற பெண் போலீஸ்…
இதோ அந்த வஞ்சகர்கள் வெறியாட்டம்
என் கைப்பேசியில்………
அவர்களை கைது செய்ய போய்க்கொண்டிருக்கிறேன்
நான்!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Aug-19, 4:39 pm)
பார்வை : 66

மேலே