இன்று சுதந்திர தினம்

'பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு'.....
'ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே
நாம்….. ஆடுவோமே'...… என்று
நம் நாடு சுதந்திரம் அடைந்ததை
தன் மனக்கண் முன்னால் காண்கின்றான்
மஹாகவி ….. சுதந்திரம் அடையும் முன்னே
ஆம் அவன் கவி முனி , முக்காலம் உணர்ந்தோன்
இந்த சுதந்திர திருநாளில் கவிஞன் நான்
கவி முனி , நல்லறத்தால், நல்லாளொழுக்கத்தால்
அந்தணன் கவி ஞானி பாரதிக்கு Anjali
செலுத்துகிறேன்… இறைவா இத்தர
நாள் மக்களை இன்னும் இன்னும் படைப்பாய்
நாட்டு மக்கள் நல்லோராய் வாழ
வாழ வைக்கும் இவரை
சுதந்திர திரு நாடு நம் நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
எல்லோரையும் வாழவைக்கும் நன்னாடு
வாழ்க நம் நாடு வளர்க இதன் பொழில்
காத்திடுவோம் சுதந்திரத்தை நம்
கண்ணினும் மேலாய்…. அந்நியரை
இனியும் எப்போதும் நம் பொன்னாட்டில்
நுழைய விட மாட்டோம் ..காத்திடுவோம்
நம் தாய் நாட்டை நம் தாயைப்போல
'ஜெய பாரதம்' ...'ஜெய் ஹிந்த்'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (15-Aug-19, 10:05 am)
பார்வை : 374

மேலே