நானெப்படி வாழ்த்துச் செல்ல 🤔
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் - ஆனால்
சும்மா கிடக்கிறது என்பதிலே எத்தனை மகிழ்ச்சி - அட இரவில் வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை - என ரகுமான் சொல்ல,
பின் தொடர்வோர் பகலில் உறங்குபவருக்காய் போராடுகிறார்களே... தமிழன்பன் கேட்ட,
இன்னொரு சுதந்திரம் வேண்டும் இரவில் எதைக் கொடுத்தான்? - என்ற கேள்விக்கு பாவம் அவருக்கே விடை தெரியாது!!!
“அவன் சுதந்திரம் என்னும் பட்டு வேட்டியின் கனவு கண்டபோது – அவன் கட்டியிருந்த கோவணம் களவாடப்பட்டது” -என்று மு. மேத்தா அவர்கள் கூறியும் யாரும் மானத்தைப் பற்றி கவலைப் பட்டதாய் தெரியவில்லை...
வைரமுத்து அவர்கள், மகாத்மாவிடம்...
உன்னையே உருக்கி நீயொரு சுதந்திர மோதிரம் கொடுத்தாய்.. அணியும் போதுதான் அறிந்து கொண்டார்கள் இவர்கள் விரல்களே இல்லாத தொழுநோயாளர்கள் ' -என்று சொல்ல முற்பட்டது கூட மகாத்மாவுக்கு கேட்காது என்பதால் தானோ!!!
இதனையெல்லாம் உணர்ந்தால் தர்ம சக்கரத்திற்கே தலை சுற்றக்கூடும்...
இருந்தும்
73ஆண்டுகளாய் அடிமைப்பட்டுக் கொண்டே, சுதந்திரமாய் கொண்டாடுகிறோம்
இந்த சுதந்திர தினத்தை இதற்கு
நானெப்படி வாழ்த்துச் செல்ல!!! 🤔