என் தேவதையே

என் தேவதையே
என்னை காணலையே
உன் மௌனத்தால் ஒரு வலி
வலி புரியுமோ காதலி
காதல் நிஜமாய் உயிர்வலி
நெஞ்சம் மறக்குமா உன்விழி

கண்கள் பேசும் வார்த்தை சொல்ல
மொழிகள் ஒன்றும் தேவை இல்லை
பேச தெரிந்த விழிகளின் காதல்
எந்த நாளும் தோற்றதில்லை ...

காதல் விழிகளின் வசமா
விழிகளின் ரணமா
சொல்லடி உன் வலி
பிரிவினை தருமா
சரிவினில் விடுமா
முடிவை சொல்லடி முடிவை நான் தொடுமுன் ....

எழுதியவர் : ருத்ரன் (16-Aug-19, 8:31 am)
சேர்த்தது : krishnan hari
Tanglish : en thevathaiye
பார்வை : 515

மேலே