சந்திர மண்டலம்- வாத்தியார்-மாணவன் உரையாடல் -நகைச்சுவை

வாத்தியார் (வகுப்பில் மாணவரிடம் உரையாடல்)
மாணவர்களே, அவ்வுலகம் சென்று வந்தோர் உண்டா
இல்லை என்பேன் நான் , ஏனெனில் , அது தனி
மனிதனால் செய்ய இயலாதது…
முனிவர்கள் ஞானத்தால் சென்று வந்தனர் என்று
கூறுவார் அறிஞர். நீங்கள் நினைப்பதென்ன சொல்லுங்கள்
பார்க்கலாம் தைரியமாய்….

மாணவன் வாகீசன் : ஐயா, நீங்கள் அறிவீர் நீல் ஆம்ஸ்ட்ரோங்
1969 இல் சந்திர மண்டலம் சென்று வந்த
முதல் மனிதர்.இன்னும் நீங்கள் இதை மறந்திருக்கலாமா

வாத்தியார் (கொஞ்சம் அசடு வழிய): வாகீச நீ சொல்வது
எனக்கும் தெரியும் ஆனால் நீல் ஆம்ஸ்ட்ரோங்
சென்றது சந்திர மண்டலம் என்று யாரறிவார்
வாகீசன் : ஐயா , பணிவுடன் சொல்வேன் அதுதான்
விஞானம் …..

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Aug-19, 12:14 pm)
பார்வை : 101

மேலே