வா உரையாடலாம்
கொஞ்ச நேரம்
ஒத்தி வை- உன்
கோபங்களை!
வா உரையாடலாம்!
எந்த ரீங்காரமுமின்றி
கிடக்கிறது - இந்த
மொபைல் பூச்சி!
ஆன்லைனில் இருந்தும்
என்னை ஆஃப்லைனிலேயே
வைத்திருக்கிறாய் நீ!
என் நேரங்களையெல்லாம்
திண்கிறது உன் கோபங்கள்!
உன் இடம்தேடி வந்து
என் மனம் ஆயிரம்
சமாதானங்கள் கூறியும்
உன் காதுகளில் விழவேயில்லை!
கொஞ்ச நேரம்
ஒத்திவை - உன்
கோபங்களை!
வா உரையாடலாம்!
ரோடு ரோடாய் திரிகிறேன்!
எங்கு திரிந்தாலும்
உன் நினைவுகளை
சுமந்து செல்ல
உத்தரவிடுகிறாய்!
ஒவ்வொரு நாளும்
அதிகமாகிறது - இந்த
வெறுமையின் கணம்!
சுமக்க இயலாது
தவிக்கிறேன்!
வா உரையாடலாம்!
அந்த நிகழ்விலிருந்து
மீள உன் அருகாமை
வேண்டும்!
கொஞ்ச நேரம்
ஒதுக்கி வை உன்
கோபங்களை!
வா உரையாடலாம்