பொய் மூட்டை
பொய் மூட்டை.😎
பெண்கள் இந்த நாட்டு கண்கள்.
நீர் இன்றி அமையாது இவ்வுலகு
பெண்னே நீ இன்றி இவ்வுலகேது.
பாரதி கண்ட புதுமை பெண்கள்
இன்று எந்நாட்டில் மிகவும் எழுச்சியுடன் வீறு கொண்டு எழுகிறார்கள்.
பெரியார் என்ன சொன்னார், பெண்கள் கையில் இருக்கும் சமையல் கரண்டியை பிடுங்கி, அதே கரத்தில் புத்தகம் தந்திடு, எதிர் கால இந்தியா ஒளிமயமாகும் என்றார்.
( இப்படி பெண்ணின் பெருமையை பேசிய அரசியல்வாதியின் கைபேசியில், வாட்ஸ்அப் குறுஞ்செய்தி வந்தது:- தலைவா, இன்னைக்கு நைட், நீ எப்பவும் வர அதே லாட்ஜ், ரூம் நம்பர் எட்டு, சூப்பர் குஜ்லி. மிஸ் பண்ணிடாத தலைவா. அவ்வளவு தான் சொல்லிட்டேன். நைட் சார்ப்பா பத்திரை மனிக்கு... உங்கள் மண்ணாங்கட்டி.)
எங்கள் ஆட்சி காலத்திலும் நாங்கள் பெண்களுக்கான சகல உரிமைகளையும் வாரி வழங்கிறோம் , எதிர் வரும் காலங்களிலும் அவர்கள் வாழ்வுரிமைக்கு அரும்பாடுபடுவோம். பெண்கள் வாழ்க. பேச வாய்ப்பு அளித்த அனைத்து நல்லுங்கங்கள் அனைவருக்கும் நன்றிதனை பாராட்டி விடைபெறுகிறேன்.
. நன்றி. வணக்கம்.
( ஹலோ... டெய் மண்ணாங்கட்டி... கண்டிப்பா...)
-பாலு