காய்ந்த சருகு

காய்ந்த சருகு

(ஏறகுறைய உண்மை)



அமேரிக்கன் என்னும் அரக்கனிடம் அடிமையாய் பணிபுரிந்து
அவன் போடும் எலும்பு துண்டுகளை வெட்கமில்லாம்மல் எடுத்து வந்து
கோடியாக, கோடியாக சம்பாதித்த
அந்த பணத்தில் காங்கிரீட் புறா கூடு வாங்கி
அதில் வாழும்
மிருகம் என் மகன்.

பத்து மாதம் சுமந்தேன் அது இயற்கை
பத்திரமாக அவனை வளர்த்தேன்
அதுவும் இயற்கை.
படிக்கும்போது ஒரு நாள் சாப்பாடு எடுத்து செல்ல மறந்து விட்டான் பசி தாங்க மாட்டான் என் பிள்ளை
எடுத்துக்கொண்டு அவன் படிக்கும் கல்லூரிக்கே ஓடினேன்.
அதைவாங்கி சாப்பிட்டவன்
என்னை அவன் அம்மா என்று அவர்களிடத்தில் அறிமுக படுத்த சங்கோஜப்பட்டான்.
ஏழை அம்மா இல்லையா நான்.

பாடுபட்டு படிக்க வைத்தேன்
படிப்புக்கு ஏற்ற வேலையும் கிடைத்து.
கை நிறைய சம்பாதித்தான்.

இவள் தான் மனைவி என்று ஒரு நாள் திடீரென்று எவளையோ
அழைத்து வந்தான்.

அவன் ஆசையே என் ஆசையாக ஒப்புகொண்டேன்.

ஒரு மாதம் ஓடியது
எதை கண்டு மயங்கினானோ
அவள் சொல்லே அவனுக்கு மந்திரம் ஆனது.

முதலில், மறியாதை குறைந்தது
அவனுக்கு நான் அம்மா
சும்மாவானேன்
அவளக்கு நான் மாமியார்
வேலைக்காரி ஆனேன் நாளடைவில் முழுவதும் முற்றிலும் என்னை புறக்கணித்தனர்.
ஒரு நாள் இரவு
அடித்து துவைத்து வீசப்பட்டேன் வீதியில்.

பலத்த அழுகையுடன் மனம் தளர்ந்து வாழ்கையின் ஓரத்திற்க்கே வத்தவளை தாங்கி படித்தது அந்த கரம் 'அன்பு கரம்' என்னும் முதியோர் இல்லம்.

புதிய வாழ்க்கை
புதிய சொந்தம் மனநிறைவான வாழ்க்கை
இங்கே கண்டேன்.

பொன்னகை கேட்கவில்லை அவனிடம்
வெறும் புன்னகை தான் கேட்டேன்
அவனிடம் பாசம் எதிர்பார்கவில்லை அவனிடம் வெறும்
பரிவு தான் எதிர்பார்த்தேன்.

மறியாதை கேட்கவில்லை அவனிடம்
வெறும் ஆளாக இருக்கிறேன் உன்னுடனே என்றேன்
மறுத்துவிட்டான்.
மண்டியிட்டு அழுதேன்
மயங்கவில்லை அவன்.
மாணங்கேட்ட என் மகன்
தூ... தூ என் நா கூசுகிறது அந்த ஆறு அறிவு மிருகத்தை என் மகன் என்று அழைப்பதற்கு பாவி, படுபாவி
என்னை அடித்து துரத்திவிட்டான்.

ஆறு அறிவு படைத்த மிருகம்
என்னை ஆளா துயரத்தில் ஆழ்திவிட்டது.
ஐந்து அறிவு உள்ள நான் வளர்த்த நாய் என்னுடனே வத்துள்ளது.

நவநாகரீக போர்வையில்
போலி
முகமூடி அணிந்து வாழும் அந்த சோளகாட்டு காட்டு பொம்மைகளைக்கு இந்த பணங்காட்டு நரி இனி அஞ்சாது
இனி அந்த நன்றி கெட்ட நாய்களை
என் மனம் நினைக்காது
நாடாது.

மரணத்தின் விளிம்பில் உள்ள நான் மிக தைரியமாக எதிர்கொள்கிறேன் என் மரணத்தை.

என் இறுதி மூச்சு நின்றவுடன்
என் உடலை குப்பையில் கூட வீசுங்கள் தவறில்லை
தயவு செய்து அந்த இரண்டு கால் பிராணியிடம் மட்டும்
என் உடலை ஒப்படைக்காதீர்.
- பாலு.

எழுதியவர் : பாலு (20-Aug-19, 5:42 pm)
சேர்த்தது : balu
Tanglish : kayntha saruku
பார்வை : 99

மேலே