உதிக்கும் கதிர்

அருவியின் ஆர்ப்பரிப்பில்
அறிவியலை கண்டிடுவோம்
அருமைமிகு இயற்கையின்
அடிபணிந்து தொழுதிடுவோம்

எந்நாளும் வீசுகின்ற
எழில் காற்றை போற்றிடுவோம்
எத்திக்கும் நமதென்று
ஏகாந்த மனங்கொள்வோம்

மண்ணின் உணர்வை மதித்தே
மக்கிடும் உரமிட்டு பயிரிடுவோம்
மரஞ்செடிக் கொடிகளை
மன்னராய் மதித்து போற்றிடுவோம்

அறிவியல் பயன்பாட்டை
அத்துமீறாமல் அளவோடு வைப்போம்
அறச் செயலைச் செய்தே
அனைவரையும் அகமகிழ செய்வோம்

உடலுக்கு உகந்த உணவை
உளமாற உண்டு மகிழ்வோம்
உதிக்கும் கதிரை தொழுதே
உயிர் வாழ்வை அதிகரிப்போம்
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (20-Aug-19, 8:12 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : uthikkum kathir
பார்வை : 39

மேலே