முடிக்க மனமில்லை

ஒரு மாலை மலர் தோட்டத்தில் விரியக் கண்டேன்
ஒரு வெள்ளை நிலவு வானில் வளரக் கண்டேன்
ஒரு பூந்தென்றல் மேனியை தழுவிட நடந்தேன்
ஒரு கவிதை நெஞ்சினில் துவங்கி..... தயங்கிடக் கண்டேன்
புன்னகை இதழில் மலர்ந்திட அவள் முன் வர தொடர்ந்தேன்
தொடர்ந்தேன் வானவில் வரிகளை நெஞ்சில் தொடர்ந்தேன்
முடிக்க மனமில்லை !