தனிமை
என்னில் பாதி நீ .
உன்னில் பாதி நான்
என்றெல்லாம் நாம் காதலராய்
சுதந்திரமாய் திரிந்து வந்தபோது
நீ என் காதில் சொன்னது இன்னும்
என் காதில் ரீங்காரம் செய்ய நீயோ
சொல்லாமல் கொள்ளாமல் என்னை எனோ
விட்டு விட்டு போய்விட்டாய்
உன்னில் பாதி என்று என்னை அல்லவோ
உன்னோடு எடுத்து சென்றுவிட்டாய்
நீ வாராது போகிற பாதி நான்
உயிர் வாழ்ந்து என்ன பயன் அன்பே
நீ எப்படியோ என் பேதலிப்பை அறிந்து கொள்வாயோ
என்னை வாழவைக்க வருவாயோ
இல்லை இப்படியே என்னை மாய்த்துவிடுவாயோ
என் செய்வேன் நான் , தனிமை என்னை
வாட்டுகிறதே என் செய்வேன் நான்