பிக்பாஸ் - பாசம் எல்லாம் வெளிவேசம்தானுங்க

மது போனதால வெளியேற்றமில்லைன்னு நினைக்க வேண்டாம் அது இருக்கு என்று சனிக்கிழமை சொல்லியிருந்தார் கமல். நேற்று வந்தவுடன் உள்ள இருக்கவங்க எல்லாம் உணர்ச்சிக்கு அடிமையா இருக்காங்க... இது ஆபத்தானது... நாம போய் கண்டிப்பாப் பேசியே ஆகணும் என்றார். ஜலதோசம் கொஞ்சம் குறைந்தது போல் குரலில் தெரிந்தது.எப்பவும் போல் உள்ளே போனதும் பரஸ்பர நம்ஸ்காரங்கள்... வாவ் சார்... ஆசம் சார்... என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வார்த்தைகளைக் கடந்து காலர் ஆப் த வீக் லாஸ்லியாவுக்கு, தன்னோட கைக்காசை செலவு பண்ணி போன் பண்ணி இந்த மாதிரிக் கேள்விகளைக் கேட்பதைவிட காசை மிச்சப்படுத்தலாம் மக்களே... அப்படி என்ன கேள்வியின்னுதானே கேக்குறீங்க... நீ ஆடிக்கிட்டே இருக்கியே நியூஸ் வாசிக்கும் போதும் அப்படித்தானான்னு செமையான கேள்வி, அதுக்கு நான் அடிக்கிட்டுத்தான் இருப்பேன்.... ஆனா கேமரா ஆன் ஆனதும் ஆடுறதை நிறுத்திட்டு நியூஸ் வாசிப்பேன் என லாஸ்லியாவின் சூப்பர் பதில் வேற... இங்கதான் கக்கூஸ்க்குள்ள கூட கேமரா வச்சிருக்கானுங்களே அப்புறம் ஏன் ஆடுறேன்னு யாரும் கேக்கலை... கேள்வி கேட்டவங்க கூட 'பக்கத்துல இருக்க பதருக்காக உன்னோட பாதரைத் தூக்கி வீசலாமா'ன்னு கேக்கலை... என்னமோ போங்க... கேள்வி கேக்குறவங்கள்லாம் மொக்கையாவே கேக்குறாங்க.கவினுக்கும் சாண்டிக்கும் நீங்க ரொம்பச் செல்லங் கொடுங்குறீங்கன்னு இணையத்துல எல்லாரும் கமலைத் திட்டுவதை வாசிச்சிட்டாரு போல, இன்னைக்கு சாண்டி அன் கோவுல அர்ச்சனையை ஆரம்பிச்சார்... அர்ச்சனையின்னதும் தேங்காய் உடைச்சாருன்னு நினைச்சிடாதீங்க... எப்பவும் போல பூவாலதான்... பாத்ரூம்க்குள்ள போயி உட்கார்ந்து பாட்டுப் பாடிக்கிட்டே இருந்தா... மத்தவங்க எப்படி அங்க போகமுடியும்... அது ஒரு பஞ்சாயத்து ஆலமரமில்லையே... அங்கயே குந்திக்கிட்டு இருக்க... இனிமேல் அங்க கூடிக் கும்மாளம் போடாதீங்கன்னாரு... உடனே கஸ்தூரி பாட்டெல்லாம் பாடுறாங்க சார்ன்னு சொல்லவும் அட லூசு அதத்தானே இம்புட்டு நேரமாப் பேசுறேன்னு நினைச்சிக்கிட்டு எங்க உள்ளயா வெளியயான்னு கேட்டாரு... ரெண்டு பக்கமும்தான்னு சொல்ல... பாட்டுப் பாடாம கக்கா போ முடியாதுல்ல அப்படின்னு நெனச்சி சிரிச்சிக்கிட்டாரு.அப்புறம் அப்பா மகள் பிரச்சினையைக் கையில் எடுத்தார்.கமல் : என்ன சேரன் மகளுக்கு குட்நைட் சொல்றதில்லையா..?சேரன் : எனக்கு எல்லா நைட்டும் பேட்நைட்டாவே இருக்கு இதுல குட்நைட் எங்க சொல்றது..?கமல் : என்னங்க சேரன்... சொன்னதைக் கவனிக்கலை... என்ன சொன்னீங்க..சேரன் : இல்ல சார்... பொம்பளப்புள்ள அடக்கம் ஒடுக்கமா நேரத்துக்கு வீட்டுக்கு வந்தா நாம குட்நைட் சொல்லிட்டுப் படுக்கலாம்... ஆனா இதுதான் பஜாரி மாதிரி பயலுக கூட சுத்திட்டு நள்ளிரவுப் பேய் மாதிரி ரெண்டு மணிக்கும் மூணு மணிக்கும் படுக்க வருதே அப்புறம் எப்படி குட்நைட் சொல்றது.கமல் : லாஸ் நீங்க சொல்லுங்க.லாஸ்லியா : என்ன சார்..?கமல் : சேரப்பா இப்ப வேறப்பா ஆன கதையை...கவின் (மெல்ல) : மச்சான் அந்தாளு மோசமானவன்னு சொல்லு மச்சான்... அவனை ரெட் கார்டு கொடுத்து அனுப்பச் சொல்லு மச்சான்... அப்பத்தான் நான் உனக்கிட்ட பயமில்லாம கடலை போடலாம்.லாஸ்லியா : அவரு நிறைய விஷயங்கள்ல சரியில்லை சார்... எதுக்கெடுத்தாலும் என்னைய ஜெயிலுக்கு அனுப்பவே குறியா இருக்கார் சார்.கமல் : நல்லதுதானே... அப்பத்தானே கவின் ஒத்த வீட்டு நாயி....கவின் : சார்ர்ர்ர்ர்ர்...லாஸ்லியா : என்ன சொன்னார்... புரியலையே...கவின் : ஏம்மச்சான் நீ வேற... என்ன சார் இப்படிச் சொல்லீட்டீங்க...கமல் : இல்லை கவின் நீங்க ஒத்த வீட்டு நாய் திருடனுங்க வராம ராவெல்லாம் முழிச்சிருக்க மாதிரி நீங்க ஜெயிலுக்கம்பிக்கு முன்னால காத்துக்கிட்டு இருப்பீங்கன்னு சொன்னேன்.சேரன் : சார் எம்மக நல்லாயிருந்தாத்தான் எனக்குப் பெருமை... அதான் அவ தப்பையெல்லாம் உணர்த்தினேன்... அவ புரிஞ்சிப்பா.கமல் : லாஸ்லியா சேரன் சொன்னதைத்தான் நானும் சொல்றேன். நீங்க இந்த மூணு வாரமாத்தான் முன்னுக்கு வந்திருக்கீங்க... அதுக்கு சேரனே காரணம்.லாஸ்லியா : ஓ அப்படியா... நான் கவின்னுல்ல நினைச்சேன்....கமல் : அவன் நீ முன்னுக்கு வான்னு எங்க சொன்னான் என் பின்னுக்கு வானுல்ல கூப்பிடுறான்.... அதனால அப்பனை மன்னிக்கலாம்.சேரன் : மன்னிப்பெல்லாம் வேண்டாம் சார்... அவ மனசு எனக்குத் தெரியும்.லாஸ்லியா : இல்ல சார்.. அவருக்கிட்ட பேச கவின் பெர்மிஷன் வேணும் சார்... கிடைச்சாப் பேசுவேன்.கவின் : பெர்மிஷன் ரிஜெக்ட்டேட் சார்...சேரன் : பரவாயில்லை சார்... அவ எங்கயிருந்தாலும் நல்லா இருக்கட்டும்.கமல் : சரி பாசமலர்களுக்குள் ஒரு விஷச்செடி... விஷச்செடி துளிர்க்கிறதா... அல்லது பாசமலர்கள் துளிர்க்கிறதா என்பதை வரும் வாரங்களில் பார்ப்போம்... வெளியேற்றம் இருக்கு... ஒரு சின்ன இடைவேளைக்குப் பின் வர்றேன்.மீண்டும் பசங்க பக்கமே போனார்...கமல் : ஏனப்பா கற்பூரம் மாதிரி உடனே பத்திக்கிறீங்க... ஈர வெறகாட்டம் கொஞ்சம் ஆட்டம்காட்டி பத்திக்கலாமே.அவென்ஞ்சர்ஸ் : நாங்க யாருக்கும் ஆரத்தி காட்டுறதில்லை... டைரக்டா பூக்குழி.கமல் : அதான் வாரம் முழுவதும் பார்த்தேனே... உங்களோட ஆகாவலி ஆட்டத்தை.கஸ்தூரி : சார் (ஸ்கூல் பிள்ளை மாதிரி கைதூக்கி) கற்பூரம் எப்படிப் பத்திக்கிச்சுன்னு கேட்டீங்கதானே..?கமல் : (ஆத்தாடி இது பேசுனா விடாது... என்ன பேசுதுன்னும் வேற புரியாதே...) ஆமா கஸ்தூரி உங்க குரலுக்காகத்தான் வெயிட்டிங்.கஸ்தூரி : அதான் வத்திக்குச்சி வந்திருச்சே.அவென்ஞ்சர்ஸ் : ஆஹா காக்கா வாலண்டியரா கழுகோட வண்டியில ஏறுதே..?வனிதா : மதுவை விரட்டுன மாதிரி மவளே உன்னை விரட்டலை... நான் நாட்டாமையை நடுத்தெருவுக்கு இழுத்த மகள் இல்லைடி.கமல் : வத்திக்குச்சியா... அது யாரு...?வனிதா : நானே... நானே...கமல் : இது என்ன புதுப்பேரு... ஆமா யாரு வச்சது..?அவென்ஞ்சர்ஸ் : நாங்கதான்...கமல் : பார்றா தர்ஷனைக் காட்டிக் கொடுக்கக் கூடாது கக்கூஸ் குழுவோட குழு மனப்பான்மையை...தர்ஷன் : பத்த வச்சிட்டியே பரட்டை...வனிதா : சார் வத்திக்குச்சி நல்லதுக்கும் பயன்படும் சார்.கமல் : சரி எல்லாரையும் நீ எதுக்கு வந்தே... நீ எதுக்கு வந்தேன்னு கேக்குற வத்த்த்திக்குச்சி எதுக்கு வந்தது என நாம் கேட்போம்.வனிதா : ஏதோ ஒரு விதத்துல மக்கள் என்னை மிஸ் பண்றோம்ன்னு வருத்தப்பட்டாங்க சார்... அதான் வந்துட்டேன்.பார்வையாளர்கள் : அடி பாதகத்தி... நாங்க எப்படி உன்னைய விரும்பினோம்... வேண்டான்னுதானே அனுப்பினோம்... இந்த பிக்பாஸ் டிஆர்பிக்காக உன்னைய திரும்ப கூட்டியாந்துட்டாருன்னு கவலையில இருக்கோம்... விரும்புறோம்ன்னு சொல்றே.வனிதா : சரி... சரி... சார் நான் உங்களை மிஸ் பண்ணினேன்... அதான் வந்துட்டேன்.சாண்டி : அய்யோ... ஆத்தா.. கேர் ஆவுதே.கமல் : என்ன சாண்டி... என்னாச்சு..?சாண்டி : இதை ஆண்ட்ரியா சொல்லியிருந்தாலும் ஓகே சார்... இந்த அம்மா சொல்லுதே சார்.கஸ்தூரி : சார் இதுல பாருங்க...கமல் : நாம நாமினேசனைப் பார்ப்போம்... அதுவரை ஒரு இடைவேளை.மது போனதால் யாரைத் தலைவராப் போடலாம்ன்னு முடிவு பண்ணும் நேரமிது.. போட்டியில் கலந்துக்கிட்ட தர்ஷனா... ஷெரினா...?அவென்ஞ்சர்ஸ் : ஷெரின்.மத்தவங்க : அதான் அந்த மூதேவிங்க முடிவு பண்ணிருச்சுகளே ஷெரினே இருக்கட்டும் சார்.கமல் : வரும் வாரம் ஷெரினை நாமினேட் பண்ண முடியாது.அவென்ஞ்சர்ஸ் : சேரன் இருக்க ஷெரின் எதுக்கு நாமினேசனுக்குசேரன் : அதான் சார்... எட்டு வாரமா முயற்சிக்கிறேன்.. முடியல.அவென்ஞ்சர்ஸ் : எம்பது வாரமானாலும் உனக்கு வரம் தரமாட்டோம்.கமல் : எவிக்சனுக்குப் போவோமா..?அவென்ஞ்சர்ஸ் : எப்பத்தான் போறேன்னு பார்ப்போம்.கமல் : இரண்டு ஜோடிகள் இருக்கீங்க... இதுல மூத்த ஜோடி கவின்-லாஸ்லியா... அதனால அவங்களைக் காப்பாத்துவோம். மற்றொரு ஜோடியான முகன்-அபிக்குள் சுமூகமான உறவில்லை என்பதால் அபியை மேடைக்கு அழைக்கிறேன்.அதன்பின் லாஸ்லியா, ஷெரின் என பாசமலர் அழுகாச்சி காவியம்... பாரதிராஜாவின் கருவாச்சி காவியம் இல்லை.அபி கண்ணாடி பதக்கத்தை உடைத்து வெளியேற, முகன் உடைந்த இதயத்தை ஒட்டிக் கொண்டிருந்தான்.... சில்லான கண்ணாடியை லவ்வோடு நோக்கினான்... பயபுள்ள லவ்விட்டுத்தான் நான் உத்தமன்னு ஊளையிட்டு அபியைக் கெட்டவளாக் காட்டியிருக்கு... காதலோடு பார்த்ததைப் பார்த்த தர்ஷன் ஒட்டி வச்சிக்கப் போறியாக்கும்... ரணகளத்துலயும் உனக்கு கிளுகிளுப்புக் கேக்குதுல்ல என்றான்.கவினிடம் அழுது கொண்டிருந்தார் ஷெரின்... ஆஹா எங்க கை மாறிடுமோன்னு தர்ஷன் அவசரமாய் ஓடிவந்தான்... உடனே கவின் மச்சான் இவளுக்கு ஆறுதல் சொல்லு என்றான் நல்லவனாய்... உடனே தர்ஷன் தானே கிளுகிளுப்பையாக மாறினான்... என்னடா பண்றேன்னு ஷெரின் சிரிச்சாங்க... தர்ஷன் ஹாப்பி மச்சி... கவின் சோக மோடுக்குப் பொயிட்டான்.வெளியில் வந்த அபியிடம் கமல் பேசி, குறும்படம் போட்டார்... அபி உண்மையில் அபியாய் இருந்தார்... இந்த அபியை இந்த அம்பது நாளில் நாம் பார்க்கலை... இப்படி இருந்திருந்தால் ஒருவேளை அபி நூறு நாளைத் தொட்டிருக்கலாம்... தவறிழைத்து விட்டாயே அபி... மிஸ் யூ அபி.நண்பர்களுடன் அவ்வளவு அழகாகப் பேசி, கமலை வனிதாவுக்கு கோபம் வர ஒருமுறையும் தனக்காக ஒருமுறையும் கட்டிப் பிடித்தார்... வனிதா அனுப்பிய பறக்கும் முத்தங்கள் கமலைச் சென்றயடையும் முன் பிடித்து மேடைக்கு கீழே வீசினார்... வனிதாவால் பிக்பாஸ் வீட்டுக்குள் மட்டுமல்ல கமல் பக்கமும் புயல் வீசினாலும் ஆச்சர்யமில்லை...அபியிடம் தன் மகளுக்கு பிறந்தநாள் எனச் சொல்ல முயன்ற வனிதாவை முன்தினம் போலவே பேசவிடாமல் கத்தினார்கள் பார்வையாளர்கள்... இது விஜய் டிவி ஏற்பாடு போல்தான் தெரிகிறது.அபி சிறு குழந்தைக்கு முத்தம் கொடுத்துச் சிலருக்குக் கை கொடுத்து வீட்டுக்குக் கிளம்பினார். கமலும் போயாச்சு.மறுபடியும் அகம் டிவி வழியே அகத்துக்குள்ளே போனாங்க...அப்பாவும் மகளும் கட்டித் தழுவி கண்ணீர் விட்டாங்க... உன்னைய நான் புரிஞ்சிக்கலை... என்னைய நீ புரிஞ்சிக்கலைன்னு சோக கீதம் பாடுனாங்க... உனக்காக குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் வச்சிருக்கேன்னு சொல்லி, சொல்ல மறந்த கதை சேரனா அழுதாரு... ஆத்தி எங்கப்பனுக்கு எம்மேல் இம்புட்டுப் பாசமிருந்திருக்கே... பாழாப்போன கண்ணாடியால அப்பனையே எதித்து நின்னுட்டனேன்னு கிழக்குச் சீமையில ராதிகா மாதிரி அழுது புலம்பி தோள் சாய்ந்தார் லாஸ்லியா.இந்த இடத்துல சேரன் கொஞ்சம் அதிகமாகவே நடிப்பது போல்தானிருந்தது... லாஸ்லியா அழுததெல்லாம் பொய் என்றே தோன்றியது. ஊரில் உடைந்த சட்டி ஒட்டாதுன்னு சொல்வது போல் இனிமேல் தொடரும் நேசம்... தாம்பளத்துத் தண்ணீராக இருக்கப் போவதில்லை... தாமரை இலைத் தண்ணீர்தான்... சேரன் ஒதுங்கியிருத்தல் வயசுக்கும் மரியாதை... மனசுக்கும் மங்களம். புரிந்து செயல்படுதல் நல்லது... லாஸ் இப்போது கவினின் கைப்பாவை... அவன் கொடுக்கும் சாவியில்தான் ஆடிக்கொண்டிருக்கிறாள். இயக்குநர் சேரன் புதுமுக நடிகை லாஸ்லியாவின் நடிப்பை கண்டு கொள்ளாது பாசமா... நடிப்பா... இல்லை எழுதப்பட்ட திரைக்கதையா..?சேரனிடம் பேசியபின் லாஸ்லியா, நேராகப் போய் நடந்ததையெல்லாம் கவினிடம் இறக்கி வைக்க, ஆஹா அப்பனும் மகளும் சேர்ந்துட்டா எங்காதல் என்னாகுறது... இந்தத் தத்தி குச்சிமிட்டாய்க்கும் குருவிரொட்டிக்கும் மயங்கிருச்சே... சேரப்பா உன்மேல சேரள்ளிப் பூசுறேனா இல்லையான்னு பாரப்பான்னு முகத்தை தேவாங்கு மாதிரி வச்சிக்கிட்டான்.லாஸ்லியா : என்னாச்சு... நீ ஏன் தேவாங்காட்டம் இருக்கே..?கவின் : நீ ஏன் தேவையில்லாம அந்தாளுக்கிட்ட பேசுறே.லாஸ்லியா : அவரு அழுததைப் பார்த்து பாவமாயிருச்சு.கவின் : எல்லாப் படத்துலயும் அந்தாளு அழத்தான் செய்யுறான்... அதெல்லாம் நடிப்பு...லாஸ்லியா : அப்படித் தெரியலை... கண்ணீர் வந்துச்சே...கவின் : எனக்கு வர்ற கோபத்துக்கு நல்லா வாயில வருது.லாஸ்லியா : விடு நாமினேசனப்போ உன்னைக் குளிர் விக்கிறேன்... அப்பத் தெரியும் என்னோட நடிப்பு உனக்கு.அதன் பின்பு விளக்கணைத்ததும் கிச்சனில் மகளை அணைத்து குட்நைட் சொல்லிக் கிளம்புகிறார் சேரர்... கவின் கறுவிக்கிட்டே கழுவிக்கிட்டிருக்கான்.கவின் : நீ எதுக்கு இங்க நிக்கிறே..?லாஸ்லியா : உனக்காகத்தான்...கவின் : அதான் உங்கப்பன் பொயிட்டானுல்ல... அவனோட போ வேண்டியதுதானே...லாஸ்லியா : நீ இங்கதானே இருக்கே...இருட்டிலும் கண்ணாடியைச் சரி பண்ணியபடி மீண்டும் தேவாங்காகிறான் கவின்.லாஸ்லியா : எதுக்கு இப்ப மறுபடியும் தேவாங்கானாய்..?கவின் : குள்ளநரி கூட உறவு வச்சிக்கிற நீ பக்கத்துல இருக்கும் போது நான் தேவாங்குதான்.லாஸ்லியா : இப்ப நான் என்ன பண்ணனும்..?கவின் : குள்ளநரியை நம்பாதே... அம்புட்டுத்தான்... என்னை மட்டுமே விரும்பு.லாஸ்லியா : ஓகே... அதான் நாமினேசன்ல காட்டுறேன்னு சொன்னேனுல்ல...கவின் : அப்ப இப்பக் கன்னத்தைக் காட்டு...கவின் ஒரு நச்சுப் பாம்பு... சாண்டி நல்ல பாம்பு... இருவருக்கும் கமல் பால் ஊற்றிக் கொண்டிருக்கிறார்... இந்த வாரமும் பிரச்சினைகள் தொடரும் என்று நம்புவோமாக.பிக்பாஸ் தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (22-Aug-19, 3:14 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 67

மேலே