கிருஷ்ண ஜெயந்தி

சின்ன சின்ன பாதம்

அசுரனை வதைக்க அவதாரம் எடுத்து
அன்னை அகமகிழ அற்புத ரூபம் காட்டி
அசிரீரியாய் வந்து ஆணை அளித்திட
அதிசியமாய் அங்குள்ள நதியும் வழி விட
அந்நள்ளிரவில் சிசுவும் அக்கரையை அடைந்திட
அவன் அமைத்த நாடகமும் அரங்கேறிட
இருந்த இரு சிசுக்களும் இடம் மாறிட
கண் திறந்த தாயவள் மகிழ்ச்சியின் எல்லையை கண்டிட
கோகுலத்தில்
சின்ன சின்ன பாதம் வைத்து
மெல்ல மெல்ல நடந்து வந்து
கனிய கனிய பேசி என்னை
கள்ள பார்வையால் மயக்கி
மாயன் அவன் செய்யும் லீலை
நினைக்க நினைக்க இனிக்குதே
அவன் பிறந்த இந்நன்னாளில் ஆசையோடு
இன்பமாய் கொண்டாட மனம் விரும்புதே

எழுதியவர் : கே என் ராம் (26-Aug-19, 8:02 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 48

மேலே