பெண்ணை வர்ணிப்பது பெண்ணுக்கு பிடிக்குமா

உள்ளத்தால் இணைந்தவராயின்
உரிமையென்று உணர்ந்திடுவாள்...

ஒட்டாத உறவாயின் உதறி விட்டு ஒதுங்கிடுவாள்...

புதிதான நபராயின்
புறம் சென்று ரசித்திடுவாள்...

பிடிக்காத சிலராயின்
உணர்ச்சியில் பொங்கிடுவாள்...

பழகாத பெயராயின்
காணததுபோல் கடந்திடுவாள்...

பழகிவிட்ட சொல்லாயின்
புளித்த பாலை ஒதிக்கிடுவாள்...

உள்ளமிணைந்தவர் உடனிருப்பவளை
வர்ணிததாராயின்...
கலவரந்தான்....

இடம் பொருள் ஏவல் நபர் நான்கும் மிக முக்கியம்...

எழுதியவர் : Prem0 (27-Aug-19, 10:02 pm)
பார்வை : 671

மேலே