ஆண்ட வம்சமட அடிமை ஆகமாட்டேன்
அரசியல் பேசி
எவனுக்கோ அடிமையாய் வாழ்ந்து
தனக்கான தனித்துவத்தை இழப்பதைக்காட்டிலும் சாதாரண மனிதனாய்
என் கருத்து
என் உரிமை
என் உழைப்பு
எனக்கே சொந்தமென
என் தன்ன்ன்னம்பிக்கையோடு வாழ்ந்துவிடுகிறேன்
சாதி என்ற தீயில் வெந்து
மதம் என்ற வன்முறையில் நொந்து
சமூகத்தின் கருப்பொருள் மறந்து
சாதிக்கொடி ஏற்றி
சமத்துவம் பேசும் முட்டால்
சமூகத்தில் நான்
"எவனுக்கோ அடிமையாகி
ஆண்ட வம்சமென மார்தட்டிக் கொள்ள
நான் அடிமை வம்சமல்ல
நானே தலைவன்
எனக்கு நானே தொண்டன் ....