சுருண்ட கேசம் பெற்றவளே
ஆவாரம் பூ போன்ற
அருமை நிறத்தாளே
அங்கங்கள் துடிக்குது
அள்ளி அணைத்திடவே
கமலப்பூ போன்று
கண்கள் உடையவளே
கண்ணின் கருவண்டில்
உதடு குவிக்க விரும்புதடி
பிச்சிப்பூ போன்று
உச்சவாசம் கொண்டவளே
உச்சி மோந்து உன்னில்
உறவாட நினைக்குதடி
தென்னம்பூ போலே
சுருண்ட கேசம் பெற்றவளே
தெவிட்ட தெவிட்ட அதைக்கோதி
தேன் பருக தோணுதடி
அல்லி மொட்டு போல்
அழகு கொங்கை கொண்டவளே
ஆசை என்னில் பெருகியதடி
அனைத்தும் நீயாய் மாறிடவே
---- நன்னாடன்.