கைபிடித்து
அவள் கைபிடித்து
அக்னி சாட்சியாய்
வலம் வந்தேன்
சத்தியமாக கைவிட
மாட்டேன்
காலமெல்லாம் என
மந்திரம் முழங்க
அதன் பிறகு
அவள் கைய்யை
நான்
பிடிக்கவில்லை அவள்
தான்
என் கைய்யை
பிடித்து
பத்திரமாக அழைத்து
செல்கிறாள்
கண்ணை மூடிக்
கொண்டு
என் பயணம்..,