காதலிக்கு ஓர் கடிதம்
அறியாத வயதில்
அன்பாக ஓர் கடிதம்.
காதலென்று புரியவில்லை.
மிட்டாய் காக்காய் கடி
கடித்து திண்ற வயதில்
முதல் கடிதம்.
தமிழ் எழுத தகறாறு
துணைக் கால் போடவே
தெரியாத வயது.
ஆனாலும் கடிதம்
எழுத துணிவு.
கடிதத்தில் காதல் இல்லை.
காமம் இல்லை.
கையில் இருந்த
புளியாங்காய் ,
அம்மா தந்த திண்பண்டங்கள்.
வீட்டில் பூத்த
ஒற்றை ரோஜா.
வீதியில் பூத்த
டிசம்பர் பூக்கள்.
சேகரித்து வைத்து
காதலிக்கு ஓர் கடிதம்.
ஆசையாக அவளுக்கு
கொடுக்க வேண்டிய
அன்பான எண்ணத்தால்.
கணக்கு நோட்டின்
நடு பக்கம் நான் என்றது.
கடித போக்குவரத்திற்கு
துணைக்கு நின்றது.
அன்புள்ள காதலிக்கு
ஆசையாக வரைந்த
முதல் கடிதம் .
அனைவரின் மனதில்
பூத்த அழியாத சின்னம் .
மனதில் உள்ளதை
எழுத்தால் எழுதும் துணிவு.
கொடுக்கவும் துணிவு
இன்றி நண்பர்களின்
துணை நாடல்.
காதலிக்கு ஓர் கடிதம்.
எண்ண அலைகளின்
எதிர் நீச்சல்.