அக்னியும்,அமேசான் காடும்

அற்புதங்கள் கொண்ட
அமேசான்
பற்றி எரிவது
எதனால்?

ஒன்பது நாடுகள்
சூழ்ந்த நிலப்பரப்பு.

கோடான கோடி
உயிர்கள் வாழும்
சொர்க்க பூமி.

தேவலோக மரங்கள்
சூழ்ந்த தெய்வீகம்.

அபூர்வ பறவைகள்
வாழும்
பல்கலைக் கூடம்.

விசித்திர விலங்குகள்
வாழும் மர்ம தேசம்.

மனிதனுக்கும்
சவால் விடும்.

விஞ்ஞானமும்
வியந்து போகும்.

பல்லுயிர்கள் தஞ்சம்.
மனித சக்திக்கு
விளங்காத மிச்சம்.

விடை தேடுகின்றான்
அழிவை நாடுகின்றான்.

காடுகளை அழிக்க
காரணம் தேடுகின்றான்.

வனவிலங்கை அழித்து
வருவாய் விலங்கை
வளர்க்கின்றான்.

இயற்கை இரகசியங்களை
இயந்திரம் கொண்டு
அழிக்கின்றான்.

மூச்சு காற்று தரும்
அமேசான் காட்டை
வதம் செய்ய
துடிக்கின்றான்.

அக்னி கொண்டு
அழிக்கின்றான்.
அரக்கன் உருவில்
ஆடுகின்றான்.

காட்டுத் தீ என
காட்டு மிராண்டிகளிடம்
மோதுகின்றான்.

இயற்கை மேல்
பழி போட்டான்.

செயற்கையாக
பொய் உரைத்தான்.

மானிடா.........
இயன்ற வரை
அழித்து விட்டாய்.

இன்னும் மிச்சம் மீதியையும்
புசிக்கின்றாய்.

பேராசை கொண்டவனே
பெரும் நட்டம்
காணாதே.

சாது மிரண்டால்
காடு கொள்ளாது.
காட்டையே
கண் வைத்தாய்.

சுடுகாட்டை
காணப் போகின்றாய்

இயற்கையை அழிக்கும்
மானிடா.?
சுனாமி வந்தது
ஏன் என்று கூறடா?

அழிவுக்கு
வழி வகுப்பாய்.
அழகாக பெயர் வைத்து
பெருமை கொள்வாய்.

பெற்ற அன்னைக்கு
முதியோர் இல்லம்
தந்தாய்.......

இயற்கை அன்னைக்கு
அனாதை இல்லம்
எங்கே கண்டாய்.......

மானிடா............
மானிடா..........
உனக்கு கொள்ளி
நீயே தானடா.........

எழுதியவர் : சிவமணி பரசுராமன் (1-Sep-19, 10:35 am)
சேர்த்தது : சிவமணி பரசுராமன்
பார்வை : 141

மேலே