காதல் ஜோதி


என் நெஞ்ச
எரவாணத்தில்
பத்திரமாக செருகி
வைத்திருக்கிறேன்
உன் மீது கொண்ட காதலை....

உன் முகம்
கண்டு கண்டு
உன் நினைவு தனை
உ ண்டு உண்டு
அது எக்காளத்தால்
பருத்துக் கிடக்கிறது

உன் தரிசனக் கரிசனம்
இன்மையால்
அது இப்போது
சிறுமானியப்பட்டு
சிறுத்துக் கிடக்கிறதே

ஒளிந்தது போதுமடி
உன் காதலை நீ
ஒளித்ததும் போதுமடி
கசவாரம் வேண்டாம்

இப்போதே நீ புறப்படு
இருள்பட்ட மன வீடு
காதல் ஜோதியால்
அங்கு பிரகாசிக்கட்டுமே ...

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (1-Sep-19, 11:34 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : kaadhal jothi
பார்வை : 167

மேலே