நான் வாழ்ந்திடுவேன்

பஞ்சுமெத்தையில் படுக்கையும்
பை நிறைய பணமும்
சுற்றிவர உறவுகளும்
சொந்தமாய் ஒரு மனைவி அலைபேசியில் ஒரு மனைவி உனக்கேது கவலையப்பா?
தட்டாந்தரையிலே தவிக்க விட்டுப் போனால்
ததி கெட்டுப் போகாமல்
தரணியில் வாழ வழியா எனக்கில்லை
கைதொழில் செய்தே காலத்தை கடந்திடத்தான் காலம் வந்ததே பாரும்
நீயும் உன் பணமும் நீடூழி வாழும்
நிலையாக இப்புவியில்...

எழுதியவர் : அஸ்லா அலி (2-Sep-19, 3:53 pm)
சேர்த்தது : அஸ்லா அலி
பார்வை : 196

மேலே