ஆசையா அபத்தமா

சொட்டுச் சொட்டாய் விழும்
வானத்துப் பாதரசம்
பூமிக்குத் தரும் தேன்ரசம்
பூக்கள் நனைந்தாலும்
காய்ச்சல் இல்லை
என் பாக்களை நனைக்க
இதுதான் பேரருவி
காதலிக் கண்களின் சிமிட்டல்
ஒளிருமோ மின்னல் என்று;
இமைக்கும் ஒலிதான்
இடியின் குரலோ
மடியில் விழுந்த துளிகளைப்போல்
மனதில் விழுந்தாய் தூளியைப்போல்
அரும்பிய பருவங்கள்
அலையாய் அலையும்
ஆசை வெள்ளம்
மரையாய் ஓடும்
எப்படி சொல்வது
உந்தன் உருவை
உலக மொழிகள்
தராத சொற்கள்
ஆயிரம் வாசல் இதயமாம்
வெளியேற வழியிலாமல் துடிக்கிறேன்;
இறைவனின் உருவைப்
பார்த்தது யார்?
பெண்ணின் மனதில் இருப்பவர் யார்?
ஆழ்கடலின் ஆழங்காண வழியுண்டு
இவள் கண்களின் வழியாய்
மொழி காண்ப தெப்படி?
மறதி கொடு ஆண்டவா!
மயக்கம் தீர் ஆண்டவா!
மதுவும் மாதுவும்
குணத்தில் ஒன்று
குழம்பி குழம்பி வாழ்வைக் கெடுக்கும்........
−−− ப.வீரக்குமார், திருச்சுழி.

எழுதியவர் : ப.வீரக்குமார், திருச்சுழி. (2-Sep-19, 9:56 pm)
சேர்த்தது : பவீரக்குமார்
பார்வை : 90

மேலே