அம்புப் படுக்கையினில்
![](https://eluthu.com/images/loading.gif)
இச்சைபோல் சாவுவரம் பெற்றகங் கைமைந்தன்
இச்சை யிலாவிரதன் அம்புப் படுக்கையில்
நற்தருமன் சாத்திரம் கேட்க திருமாலும்
பொற்திரு நாமம்கேட் டான் .
இச்சையிலான் ஆயிரம் சொல்லி முடிக்கவும்
இச்சையி லேற்றான்அச் சாவு !
இச்சையில் சாகத்தந் தைவரம் தந்தது
இத்தரைப் போரினில் மாண்டு முடியுமுன்
அச்சுதனைப் பாடிட வோ . ?