ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
அன்னை தந்தையே,
ஆசிரிய பெருந்தகையே
நன் மக்களின் நலம்பிரும்பியே
நீவிர் கற்பித்தது வாழ்வியலோ!
சிரிக்க சிரிக்க பேசினாலும்
சுய சிந்தனை வளர்த்தீர்
ஆளுமை செலுத்தினாலும்
உயர பறக்க வைத்தீர்
பண்புகள் விதைக்க செம்மையானோம்
பழக்கங்கள் விதைக்க சவுமியனானோம்
பாசம் விதைக்க மனிதனானோம்
பழகிய நட்பால் நண்பர்களானோம்
என்னை செதுக்கிய சிற்பியே
வாழ்வின் விடிவெள்ளி ஆனவரே
நலங்கள் பல பெற்று
பல்லாண்டு நீவீர் வாழ்கவே