ஆசிரியர் அல்ல தெய்வம்
ஆசிரியர் அல்ல தெய்வம்🙏🏽
அன்பின் சிகரமாக
ஆற்றல் மிகுந்தவராக
இயல்பை மறக்காதவராக
ஈகையை நாளும் வளப்பவராக
உண்மையை உறக்க கூறுபவராக
ஊர் மெச்சும் பணி செய்பவராக
எளிமையின் சின்னமாக
ஏற்றம் எல்லோர் வாழ்வில் செய்பவராக
ஐயம் தனை களைபவராக
ஒளி விளக்காக
ஓயாமல் எரியும் அறிவுச்சுடராக
ஒளவை சொன்னது போல் எங்களை வழி நடத்தியவராக
என்றும் நாங்கள் வணங்கும் தெய்வமாக.
எங்கள் வாழ்வுதனை செம்மை படுத்திய
அத்துனை ஆசிரியர்களும்
என்னுடைய கோடான கோடி நன்றிகள்
என் சிரம் தாழ்ந்த வணக்கம். 🙏🏽🙏🏽
- பாலு.