அவளும் மயிலும் பாகம் 2

மயில் ஒரு தனிப்பெரும் பறவை
நீல மயில் அது நின்றால் கம்பீரம்
தீர்க்கப் பார்வையால் நச்சு பாம்புகளைக்
கண்டு அக்கணமே மாய்க்கும் அது
தொகை விரித்து ஆட பார்ப்போருக்கு
மனதில் குதுகூலம் ஆனந்தம் மயிலுக்கும்
பெண்ணே உன்னைப் பார்க்கையில்
நீயும் மயில்போல் காட்சி தருகின்றாய்
மயில் நச்சுப்பாம்பைக் கொல்லும் உன்
பார்வைப் பெண்ணே என் நெஞ்சில் கல்மிஷங்கள்
ஒரு நொடியில் இல்லாமல் செய்துவிடும்
உந்தன் ஒய்யார நடையோ மயிலின்
ஆட்டம் ... என் மனதில் இன்பம் சேர்க்கும்
உன் மீது ஆரா காதல் கலந்து .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Sep-19, 12:21 pm)
பார்வை : 100

மேலே