இனிப்பு எறும்புக்குப் பிடிக்குமா

இனிப்பை எறும்புக்குப் பிடிக்குமா ?
---------------------------------------------------------------------
ஆதாம் ஏவாள் தோன்றிய
ஆதி காலம் தொட்டு
அரசன் முதல் ஆண்டிவரை
அனைத்து வித ஆள்களுக்கும்
ஆனந்தம் தருவது புகழ்ச்சி ;
ஆறுதல் தருமோ இகழ்ச்சி ?
இனிப்பை விரும்பா எறும்புமில்லை ;
இசை(புகழ்)யை விரும்பா அரும்புமில்லை !
மன்னாதி மன்னனாய்ச் சிறக்கட்டும் ;
மனிதருள் கீழாக இருக்கட்டும் !
புகழ்ச்சிகொள் சொற்கள் சொன்னால்
பூரித்தே புன்னகை சிந்துவர் !
தாலாட்டில் தூங்காத உயிர்களில்லை ;
பாராட்டில் மயங்காத மனிதருமில்லை !
பாம்பாட்டி இசைக்காடும் பாம்புபோல்
தேம்பாகப் பாராட்டின் மனமுவப்பர் !
புகழ்ந்திட்டால் பூக்களும் தினம் மலரும் ;
- அழகை
வருணித்தால் வனிதையர் மனங்குளிரும் !
மற்றோரை மகிழ்விப்பதே அரும்பணி ;
மங்கையர் மனமகிழ நீவருணி !

எழுதியவர் : தேவராஜ் அ (7-Sep-19, 12:46 pm)
சேர்த்தது : தேவராஜ் அ
பார்வை : 601

மேலே