ட்ரிங் ட்ரிங் - சித்திரம் பேசுதடி - இனியவள் சகாப்தம் 3

சரியா உளறக் கூடத் தெரியாது ..
அன்பு பாசம் நெருக்கம் எல்லாமே அஃபிஷியல் தான் .. அழகா பேசும்போது வரிகள் மாத்தி
பாடுவதைத் தவிர
ரொமேண்டிக் செய்ய வராது
சிலநேரம் டிப்ரெஷன் ஆகும்போது
சிரிக்கவைக்கிறேன்னு சொல்லிட்டு
கோமாளி ஆட்டம் போட
கஷ்ட்டப்படுவேன் ..
எனக்குத் தெரியும் எனக்கு எதெல்லாம்
ஒவ்வாமை ன்னு ..
ஒருநாள் வர்ற சடன் டிப்ரெஷன் ன்றது
மனிதனுக்குள்ள கேவலமான
ஹேபிட் ன்னு தான்
சொல்லத் தெரியும் ..
ஏன்னா வாழ்க்கையோட பகுதி
எப்பேர்ப்பட்ட மனிஷனுக்கும்
எதாவது டிப்ரெஷன்ஸ்லதான் விடிஞ்சு முடியுதுதானே ..
இதோ பக்கத்தில் பலமா நிக்கிறேன்
டிப்ரெஷன் ன்னு
சொல்லும்போது
நா ஒருத்தன் இருக்கேன்றதையே
கவனிக்காத மாதிரி இருக்கு ..
எல்லாருகிட்டயும் பேசும்போது என் கண்களுக்கு ஞானியா தெரியுறப்போ
சனிக்கூட கேது
சேர்ந்த எஃபெக்ட்டோ ன்னு தோன்றது
அடுத்த ஏதோ ஒரு நேரத்துல
அசரவெக்கிற மாதிரி
ஒரு காதல் தோணுறப்போதோ
அதீதமா வர்த்தகம் பேசுறப்போதோ
ராகு வோட obsession இருக்குமோ ன்னு
யோசிக்கிறேன்..
உன்னை செயல்படுத்த இயங்கச் செய்ய
கோபத்தின் கடைசி
எல்லைவரைப் போகும் பேச்சுகளுக்கு
சிறிது கழித்து
சாந்தமும் செய்யத் தெரியும்
மெதுவாகக் கேட்பாய்
இதுதான் அன்பா இல்லை
இன்றுதான் புதன் உன் ராசிக்கு உச்சமா என ம்ம் ..
அனுசரிக்கிறேன்
குருவக்கிரம் வேறு ..
குருவிற்கு புதன் பகைவீடு வேறு
உன் குனிந்த தலை சாய புஜம் கேட்கும் காதல் வேறு .
எல்லாம் வேறு வேறு ..
குழந்தைகளிடம் கேக்கிற்கு சண்டைப் போடுகிறவளிடம்
அந்தாதிப் பாடு என்றால்
என்ன இட்லி சாப்பிடுவதைப் போல பாடுற
அப்ப இனிமே அந்தாதிக் கேட்கணும்னா
இட்லி சாப்புடேன்ன்னு தான்
சிக்னல் பண்ணுவேன் ..
பரங்கிக்காய்த் தலையன் உங்கப்பனைத்
திட்டுவதைக் கூட
என் பாசத்தால் மறக்கிறாய்
ஒன்பதுமணி வரைதான் நீங்க பேசணும்
அதுக்கப்றமாவேனும்
கொஞ்சம் ரொமான்ஸ் பண்லாமே
ன்னு கேட்கும்போது
புரியாத சப்ஜெக்ட்டை எப்படி எடுப்பது
என்பதைப் போல்
மண்டையைச் சொரிகிறேன்..
இதென்ன முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதைப் போல்
அவ்ளோ எளிதான பாடமா..
சரி எதையவது
பாட ஆரம்பிக்கிறேன்..
வெள்ளச்சாமி கிளம்பிட்டாண்டா ன்னு
குரல் இறுக்கம் வரும்போது
இந்த லிபிகள்
லிகிதம் துறந்து வெள்ளைக் குழந்தை
ஆகின்றதே
ச்சீ ஆடைப்போடுடா மனதிற்கு
என்றால்
அந்தநேர அழுக்குகள் தென் படுவதே இல்லை..
கொஞ்சம் கெட்டப் பழக்கம் பாக்கியிருக்கு
உன்னிடம் நடத்தவா ..
கெட்டவார்த்தைப் பேசாதே
என்பாய்..
சரி ‌ நேரமாகிட்டு உறங்கலாமா
மடியோடு ஆயிரம் இடம் இருக்கு..
அழுத்தாதே
இதயத்தை ஏன் பிடித்தாய் ..

பொலிவிழந்ததாய் புலம்பிக் கொண்டிருக்கும்
உன் கண்களை
இப்போது நிலைகண்ணாடியில்
பார்க்கிறாயா ..
மீண்டுமொரு பருவம் திரும்பி
இருவரும்
காதலிக்கலாம் தானே என்றதும்
கலர்ப்படங்களில்
நனவோடையில்
எனக்கு நான் தான்‌ தெரிகிறேன்
அருகில்
ஒருச் சித்திரம் பேசிடும்
சுவரொட்டியில்
""காதலின் பொன் வீதியில்
காதலன் பண்பாடினான்""
காட்சி இழையோடுகிறது
ஏதோ ஒரு நினைவின் கோணத்தில்
சோகமாய் ஓவியம் வரையும்
உன் மெலிந்த கைகளின்மேல்
என் காமம் இழையோடுகிறது..
நீ என்னவோ அழகாய்த் தான் இருக்கிறாய்..
மூகா முத்துவின்
டோப்பா தான் ...
கொஞ்சமா தோணுன என் ரொமேன்சைக்கூட
இலயிப்புத் திரையவிழ்க்கிறது

#சைதன்யா

எழுதியவர் : அனுசரன் (8-Sep-19, 1:13 am)
பார்வை : 70

மேலே