அப்பா

ஆண்டவனால் பூமிக்கு
வரமுடியாதெனெ
அன்னையை மட்டுமல்ல
தந்தையையும்
ஓர் ஆலயமாய்
அவன் படைத்தான்!
பாசத்துடனே என்னை
அருகணைத்து அரவணைத்து
பண்பையும் அன்பையும்
பொறுமையுடன் எடுத்துரைத்து
ஆசானாய் நல்லறிவு புகட்டி
துவளும் நொடிகளில்
தோழனாய் தோள் கொடுத்து
தன்னம்பிக்கை ஒன்றே
முதலாய்க் கொண்டு
தடைகள் அனைத்தும்
தகர்த்தெறிந்து
சோதனைகளை
சாதனைகளாக
வாழ்ந்து காட்டி
எங்களின் விக்கினங்கள்
அனைத்தும் தீர்த்து வைத்த
இறைவனாய், விக்னேஷ்வரனாய்
உயிரிலும் உணர்விலும்
கலந்து நிற்கும்
என் தந்தையே!
நீங்கள் இன்றி-இங்கு
நாங்கள் என்றுமில்லை!
........
- உமா

எழுதியவர் : உமா (12-Sep-19, 10:25 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : appa
பார்வை : 1692

மேலே