பெண்ணவளே
சற்றும் தளராத மனமும்
உயர்ந்தவரை பணியும் குணமும்
உன்னில் கண்டேனடி - அரசியே
எளிதில் உதவி நீட்டும் கரமும்
செயலில் விட்டுக்கொடுக்கா முயற்ச்சியும்
உன்னில் கொண்டாயடி - அழகியே
கேலியை உதரியபடி சின்ன
சிரிப்பில் அதை மறைத்தாயடி...
கேலியை உதரியபடி சின்ன
சிரிப்பில் அதை மறைத்தாயடி...
உயிர் உள்ளவரை அவரை
மதிக்கா கர்வம் கொண்டாயடி -
காரிகையே
இறைவன் விட்ட வழி
மனம் நிம்மதி தேடுமடி - மீண்டும்
கடமை வந்தவுடன் உன்
கவலை மறந்தாயடி - பிறையே
வானம் இடித்தபடி உன் முன்
சரியுமடி - என்னவளே
வானம் இடித்தபடி உன் முன்
சரியுமடி - வாழ்நாள் முழுவதும்
என் மனம் உனக்கடி பணியுமடி...
-Aishwarya PanneerSelvam