சுவாரஸ்யம்

தொடங்குகையில் இருக்கும் அந்த சுவாரஸ்யம்
போக போக
குறைந்தே கொண்டே போகுமாம்
முதலில் இருந்த அந்த பிரமிப்பு
படிப்படியாக குறைந்து
மிகச் சாதாரணமான ஆயிடுமாம்

உறவாட தொடங்கிய நேரத்தில் இருந்த
அனைத்து பிம்பங்களும்
ஒன்றன் பின் ஒன்றாக
கீழிறங்குமாம்
அட இவ்வளவு தானா
என்று ஒரு அலட்சியமான எண்ணம்
மனதுக்குள் வந்து குடியேறி விடுமாம்

ஆம் உண்மை தான்
ரசித்துக்கொண்டிருந்த ஒரு ஓவியம்
முதன் முதலாய்
பார்த்த வியப்பில் இருந்து
விலகி நூறாவது முறையில் பார்க்கும் போது
ஒரு அலுப்பு வரத்தான் செய்யும்
எல்லாம் இங்கு மனிதர்கள் தானே

ஆனால்
அந்த பிரமிப்பு போன பின்னும்
விலகாத உறவுகள் எத்தனை உண்டென்று பார்
புதிது புதிதாக
ஒரு பிரச்சினை எழத்தான் செய்யும்
ஆரம்பத்தில் இது உனக்கு பிடித்ததே
இப்போது வெறுக்கிறாயே என்றால்
அப்போது பிடித்தது
உன்னை வைத்து
எல்லா செயல்களையும்
இப்போது பிடிக்காமல் போவது
உன்னை தவிர்த்து அனைத்து செயல்களையும்

எப்போதும் கொஞ்சி கொண்டே இருக்க
இது இரண்டரை மணிநேர திரைப்படமல்ல
இணைந்து வாழும் வாழ்க்கை
எனக்கு பிடிக்காததை நீயும்
உனக்கு பிடிக்காததை நானும்
வலிய செய்வோம்

நடித்து கொண்டெல்லாம் இருக்க முடியாது.
இப்படி அல்லும் பகலும் முறைத்து
மனதுக்குள் காதலித்து மறைந்தவர் தான் கோடி
முதல் ஆறுமாதம் மட்டும்
அன்பை செலுத்தி
இரவு படுக்கறையில் மட்டும் கொஞ்சி இருந்தவர்கள் எல்லாம் தெருக்கோடி
இது தான் இயல்பு
யதார்த்தம்
இதை போல் வாழ்ந்தவர்கள் தான் ஏராளம்
ஆதலால்
போக போக பிடிக்காமல் போவது
உன்னை சார்ந்த பிம்பங்கள் தானே ஒழிய
உன்னை அல்ல

எழுதியவர் : தீப்சந்தினி (13-Sep-19, 12:14 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 41

மேலே