கிளர்ந்தெழ

எனை கிளர்ந்தெழ செய்ய வேண்டியவைகள்
நீ அறிவாய்
எனை உன்னிடம் ஒப்புவித்து கொடுக்க
செய்ய வேண்டியவை
நீ நன்கு அறிவாய்.
எனை அணுவணுவாய் ரசிக்கவும்
உனக்கு தெரியும்
அணுவணுவாய்
உனை நான் ரசித்திட
என்னவெல்லாம் செய்ய வேண்டும்
என்பதும் உனக்கு தெரியும்
மொத்தமும் அறிந்த நீ
ஏனோ ஏதுமறியாதவளாய்
சிறு பாசங்கு காட்டி
துயில் கொள்வதாய்
விழியணைத்து கிடப்பதும் ஏனோ

எழுதியவர் : தீப்சந்தினி (13-Sep-19, 12:10 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 36

மேலே