அவன் அழகிய பேச்சு
அவன் அழகிய பேச்சு.
கற்றோர் சபைதனில் பேச வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி.
ஒரு சின்ன நடுக்கம், ஒரு சின்ன தயக்கம் உங்கள் முன்னே பேச ஆரம்பிக்கும் போது என்னுள் எழத்தான் செய்கிறது.
தவறாக ஏதாவது பேசிவிடுவோம் என்ற பயமா அல்லது அதிகபரசங்கி தனமாக உளறிவிடுவேனா என்ற தயக்கமா?
எதுவாக இருந்தாலும் என் உரையை முழுவதும் கேட்டு என்னை ஊக்க படுத்திவீர்கள் என்று நம்புகிறேன்.
எனக்கு அளிக்க பட்ட தலைப்பு
"தாய் மொழி".
என் தாய் மொழி "தமிழ்"
தமிழ் என்று என் நா உச்சரிக்கும் போதே உடல் சிலிர்கிறது. என் மனம் இனிக்கிறது.
எந்த மொழிக்கும் இல்லாத தனி சிறப்பு தமிழுக்கு எது தெரியுமா?
நாம் பேசப்படும் வார்த்தை, உச்சரிக்கும் சொல் நம்மில் இருந்து வெளிப்படும் போது அது கழுத்தோடு சரி, அதற்கு கிழே போகாது (தொண்டை பகுதி). எவ்வளவு கடினமான சொல்லாக இருந்தாலும் சரி, கழுத்துக்கு கிழே இருந்து தமிழ் சொல்லை உச்சரிக்க வேண்டிய அவசியம் இல்லை. மற்ற மொழிகள் அப்படியா. சில மொழிகள் பேசும் போது, பேசுபவர் உடல் முழுவதும் ஆடும், அசையும். பார்பதற்கு மிக கொடுமையாக இருக்கும். ஆனால் நம்மொழி, தமிழ் மொழி, அப்படி இல்லை. மிக அழகாக, மிக சாதுர்யமாக, எல்லா காலத்திற்கும் பொருந்தும் படி, வடிவமைக்கப்பட்ட இனிய மொழி, அழகிய மொழி தமிழ். எளிய மொழி தமிழ். வலிமையான மொழி தமிழ். எந்த ஒரு சொல்லும் பொருள் சார்ந்து இருக்கும்.
பொருள் சேராமல் எந்த சொல்லும் இல்லை.
தமிழில் மொழியில் எத்தனை வார்த்தைகள் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? சொன்னால் ஆச்சிரியபடுவீர்கள், இங்கே மேடையில் உள்ள சான்றோர்களுக்கு நிச்சயம் தெரியும், தெரிந்தியிருக்கும், இங்கே என் பேச்சை கேட்க வந்த இலையதலைமுறைக்கு நான் இதை சொல்ல கடமை பட்டுயிருக்கிறேன். ஒரு கோடி சொற்கள். ஆச்சரியமாக உள்ளதா நண்பர்களே, ஆச்சரியம் இல்லை தோழர்களே, உண்மை. முற்றிலும் உண்மை. இப்படி பட்ட பண்பட்ட மொழியை நாம் எப்படி எல்லாம் வாட்டி வதைக்கிறோம். வேற்று மொழி கலந்து அதன் மான்பை கொச்சபடுத்துகிறோம்.
(நான் எப்போதும் எந்த ஒரு வேற்று மொழிக்கு எதிரி அல்ல, அதே சமயம் வேற்று மொழி என் மொழியை ஆளுமை செய்ய நினைத்தால் நான் எப்படி பொறுமையை கையாள்வது.)
இதைவிட கொடுமை தமிழனாக இருந்து கொண்டு தன் பிள்ளையை தமிழ் வாசனையே காட்டாமல் வளர்க்கின்ற மேற்கத்திய நவநாகரிக மோகத்தில் சிக்கி தவிக்கும் சோலை காட்டு பொம்மைகளை நான் என் சொல்வது. வெட்கம். அவமானம். அவர்களை பார்த்து நான் பரிதாப படுகிறேன்.
அந்த அறிவு கொழுந்துகளை பார்த்து நான் சொல்வது, முட்டாள்களே!
மூடர்ககளே! "தமிழ்" மொழி என்று மட்டும் நினைக்கிறீர்கள். தவறு.
அது மானுடத்தின் வழிகாட்டி.
நம் இனத்தின் அடையாளம்.
நம் பண்பாட்டின் சின்னம்.
நாம் தினம் வணங்க வேண்டிய இயற்கை தெய்வம்.
தொல்காப்பியனும், அகத்தியனும் எப்படியெல்லாம் தமிழை காலம் கடந்த மொழியாக நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக செதுக்கி, செதுக்கி தமிழை நமக்கு அமுதாக வழங்கியிருக்கிறார்கள். அதன் சுவையை சுவைக்காமல் வேற்று மொழியை பிதற்றுவது எப்படி நியாயமாக இருக்க முடியும்.
திருக்குறளில் சொல்லாதது, நீங்கள் தினம் பயிலும் வேற்று மொழியில் படித்தது உண்டா? வள்ளுவன் மனித வாழ்வியலை சொன்னதுப்போல் வெறு ஏதாவது மொழி நீங்கள் காட்ட முடியுமா?
இதை செய்ய வேண்டும், இதை செய்ய கூடாது, ஆத்திசுவடியில், ஒளவை கிழவி, மிக, மிக எளிய முறையில் சொன்னது போல், வேறு எந்த மொழியிலும் பார்த்து உண்டா?
நம் தமிழிசை, நாட்டுபுற பாடல்கள். இவை தான் இசைக்கு அடிப்படை. இவைத்தான், இன்று நீங்கள் கேட்கும், சபாக்களில் ஒலிக்கும் கர்நாடக சங்கீதம்.
தேவாரம், திருபுகழ், திருவாசகம் என்று உருகி, உருகி, பக்தி கமழும் பாடல்கள் வேறு எந்த மொழியில் கேட்க தான் முடியுமா? சாத்தியமா?
கம்பனை போல் ஒரு கவி சக்ரவர்த்தியை வேறு மொழி நீங்கள் அடையாளம் காட்ட தயாரா?
இராமாயண புராணத்தை முத்தான, சத்தான பத்தாயிரம் பாடல் கொண்டு எழுதினான். அத்துனை பாடல்களும் படிக்க, படிக்க தேனை விட சுவையானது.
சிலம்பு வைத்து ஒரு காவியம்.
சொட்ட, சொட்ட காதல் ரசம் மிகுந்த சிலப்பதிகாரம். இளங்கோவனை போல் ஒரு கவிஞனை இனி எந்த யுகத்திலும் பார்க்க முடியாது.
முண்டாசு கவிஞன் பாரதி. பெண் விடுதலை,பெண் முன்னேற்றம் பற்றி இவன் பாடியது போல் யார் பாட முடியும்.
நாடு விடுதலைக்கு பின் என்ன செய்ய வேண்டும் என்று தமிழில் கனவு கண்ட தீர்க்கதரிசி. மகாகவி பாரதியார்.
பாவேந்தர் பாரதிதாசன். மகாகவி இந்த நாட்டிற்கு விட்டு சென்ற ஆக பெரிய சொத்து. பகுத்தறிவையும், காதலையும், பாங்காக, சமகால தன்மான தமிழனுக்கு அழகு தமிழ் நடையில் கவிதையாக, கட்டுரையாக, தமிழ் சமூகத்திற்கு வாரி வழங்கிய வள்ளல்.
கவிஞர் கண்ணதாசன். தமிழில் வாழ்வுதனை பாமரனுக்கும் புரியும் வண்ணம் திரைஇசை பாடல்கள் மூலமாக எழுதி நம் மனதில் நீங்கா இடம் பெற்ற மிக பெரிய கவியரசு கண்ணதாசன் .
இப்படி தமிழ் பணி ஆற்றியவர்கள் பற்றி நான் பேசினால் இந்த யுகம் போதாது.
இன்று தமிழ் மொழியின் உண்மையான நிலைமை என்ன.
குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டபடுவது இல்லை.
தமிழ் மொழி குழந்தைகளுக்கு கற்பிப்பது இல்லை.
அரசாங்க பள்ளியில் மட்டும் தமிழ் வாழ்கிறது.
கல்லூரிகளில் தமிழ் இருக்கிறது. அவ்வளவே. தமிழ் அங்கு ஆட்சி செய்யவில்லை. தமிழ் படிப்பதால் என்ன பயன். தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா?. தமிழ் படித்தால் எதிர் காலம் கேள்வி குறியாக ஆகிவிடும். இப்படி பல கேள்விகள்.
இப்படி பல கேள்விகளுடன், பயப்படும் பெற்றோர்கள். தமிழ் வேண்டாம், வேண்டவேண்டாம் என்று உரம் போட்டு தன் பிள்ளைகளை வளர்க்கும் தமிழை தாய் மொழியாக கொண்ட பச்சை தமிழர்கள். என் சொல்வது. மிகவும் வேதனையாக உள்ளது.
தவறு செய்கிறீர்கள் நண்பர்களே. உங்கள் எண்ணம் முற்றிலும் தவறு. தமிழ் வழி படிப்பதினால் உங்கள் குழந்தையின் அறிவு பன்மடங்கு அதிகரிக்குமே தவிர, அது ஒரு போதும் அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தடையாக இருக்காது.
உலகமே வியந்து பாராட்டும் விஞ்ஞானி
திரு. அப்துல்கலாம் அவர்கள் தமிழ் கல்வி பயின்றவரே.
சந்திராயன்- 1 வின்னில் வெற்றிகரமாக செலுத்திய விஞ்ஞானி திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்களும் தமிழ் வழி கல்வி பயின்றவர்.
இன்று சந்திராயன்-2 , உலகமே மூக்கில் மேல் விரல் வைக்கும் அளவுக்கு வின்னில் வெற்றிகரமாக செலுத்தி, நாட்டின் பெருமையை தூக்கி நிறுத்தியிருக்கும் திரு.சிவன் அவர்களும் தமிழரே. தமிழ் கல்வி பயின்றவரே.
நண்பர்களே உறக்க , மிக உறக்க சொல்கிறேன், வல்லரசு எனப்படும் முன்னேற்றம் அடைந்த நாடுகள் அனைத்தும் தன் தாய் மொழிக்கு முக்கியம் கொடுத்துதால் தான் அவர்கள் இன்று வல்லரசாக உயர்ந்துள்ளார்கள். அடிப்படை கல்வி தாய்மொழியில் கற்கும் குழந்தை நிச்சயம் எதிர்காலத்தில் மிகக்பெரிய ஆளுமையாக வருவான். இது நிரூபிக்கபட்ட விஞ்ஞான உண்மை.
தமிழை எந்த கொம்பனாலும் அழிக்க இயலாது. தமிழ் எஃகு கோட்டையை யாராலும் அழிக்க இயலாது.
தமிழ் என்ற மிக பெரிய அழகிய எஃகு கோட்டையை, விழாமல் இருக்க, இந்த மேடையில் இருக்கும் கற்றவர்கள் போல் , பல சான்றோர்கள், பல அறிவுசார் அறிஞர்கள், உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் தமிழ் நெஞ்சங்கள், என்னை உட்பட அனைவரும் தத்தங்கள் தோள்கள் கொண்டு தமிழை தாங்கி, தூக்கி பிடித்து கொண்டிருக்கிறோம். என்றாலும் சிலர், அதிகார துஷ்பிரயோகத்தை கொண்டு தமிழை அறவே அழித்து விடலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள். அது நடக்காது. நடக்கவும் விட மாட்டோம்.
அப்படி நினைத்து கொண்டு இருப்பவர்களை பார்த்து நான் சொல்வது, நீங்கள் செம்மொழி தமிழை அழிக்க முற்பட்டால், நாங்கள் கோபம் கொள்ள மாட்டோம். மாறாக ரெளத்திரம் பழகுவோம்.
அச்சமில்லை, அச்சமில்லை,
அச்ச மென்பதயில்லையே
உச்சி மீது வானிடிந்து விழ்ந்த போதிலும்.
அச்சமில்லை. அச்சமில்லை.
அச்ச மென்துயில்லையே!
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ!
என் உயிர் தமிழ். என் வாழ்வு தமிழ்.
என் தமிழ் வாழ்க. என் தமிழ் வளர்க.
வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.
- பாலு.